ஆபாச பீரங்கி..திமுக அனுப்பிய மேனேஜர் அண்ணாமலை! விஜய்க்கு ஆதரவாக வந்த காயத்ரி ரகுராம்.. ரூட் மாறுதே!
சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக திமுக - பாஜக இடையே இருந்த மோதல், தற்போது பாஜக- தவெக என திரும்பி இருக்கிறது. திமுகவின் பி-டீம் தான் தமிழக வெற்றிக் கழகம் என அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், பாஜக நிகழ்ச்சிகளில் தான் பெண்களுக்கு தொல்லை கொடுக்கப்பட்டது எனவும், திமுக அனுப்பிய மேனேஜர் தான் அண்ணாமலை என விமர்சித்துள்ளார் அதிமுகவின் காயத்ரி ரகுராம்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையை வெளியிட்டிருந்தார் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த்.

"தமிழ்நாடு பாஜகவினர் திமுகவுக்கு எதிராக போராடுவது விந்தையாக உள்ளது எனவும் பொதுவெளியில் தங்களை எதிரிகள் போல காட்டிக் கொண்டு புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தினர் பள்ளி மாணவர்கள் போல அரசியல் செய்வதாகவும், விஜய் வீட்டிலிருந்து அரசியல் செய்கிறார். அவர் ஒர்க் ஃப்ரம் அரசியல்வாதி திமுகவின் பி டீம் தான் தமிழக வெற்றிக் கழகம் என பதிலடி கொடுத்திருந்தார். இதனால் பாஜக அண்ணாமலையை தவெகவினர் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாமலையை அனுப்பியது திமுக தான் என பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகையும் அதிமுக பிரமுகருமான காயத்ரி ரகுராம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"விஜய் சாரின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவர் எதிர்மறையை புறக்கணிப்பவர். அவர் முட்டாள்களுக்கும், கவனத்தைத் தேடும் ஆபாச கேமரா வீடியோகிராஃபர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். விஜய் சாரை அவதூறு செய்ய திமுக முயற்சித்தது. விஜய் சாரை தனிப்பட்ட முறையில் தாக்க முயன்றது.
விஜய் சாரை பற்றி யூடியூபர்களை தவறாகப் பேச வைக்கப்பட்டது திமுக. விவாதங்களின் மூலம் விஜய் சாரை சேதப்படுத்த திமுக முயற்சித்தது. விஜய் சாரை குறைத்து மதிப்பிட அனைத்து அமைச்சர்களையும் அனுப்பியது திமுக. விஜய் சாரை சமூக ஊடகங்களில் தாக்கியது திமுக. ஆபாச அவதூறு செய்ய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை அனுப்பியது திமுக. பாஜக / திமுக ஆபாச பீரங்கி மேனேஜர் 'பிட்மலை' கவனத்தைத் தேடும் ஒருவரை அனுப்பி, திமுக இப்போது இறுதி முயற்சியை மேற்கொண்டுள்ளது.
விஜய் சார் அனைத்து #Negativity-யையும் புறக்கணிக்கிறார். அவர் திமுகவின் வலையில் விழ மாட்டார். திமுகவின் தொடர்ந்து பயமுறுத்தும் கனவு அதிமுக; திமுகவின் பயம் விஜய் சார். நான் அதிமுகவைச் சேர்ந்த உண்மையான தொண்டர், ஆனால் நான் விஜய் சாரின் தீவிர ரசிகன். நான் அவரை ஆதரிக்கிறேன். அவரது நேர்த்தியான அரசியலை நான் ஆதரிக்கிறேன். அரசியலில் பொறுமையும் மரியாதையும் தேவை. சிறந்த கூட்டணி மற்றும் அதே ஆபாச மனநிலை பாஜக மற்றும் திமுகவிற்கும் பொருந்தும்.
விஜய் சாரின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவர் எதிர்மறையை புறக்கணிப்பவர். அவர் முட்டாள்களுக்கும், கவனத்தைத் தேடும் ஆபாச கேமரா வீடியோகிராஃபர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்.
— Gayathri Raguramm - Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) March 18, 2025
விஜய் சாரை அவதூறு செய்ய திமுக முயற்சித்தது.
விஜய் சாரை தனிப்பட்ட முறையில் தாக்க முயன்றது.… pic.twitter.com/9VMPpi5eEF
இந்த ஜோடி பொருத்தம் கோபாலபுரம் சொர்க்கத்தில் செய்யப்படுகிறது. அவர்களுக்கு பொதுவான ஒருவர்
விஜய் சார் மீது முட்டாள்தனமான தாக்குதலுக்கு திமுகவின் அடிமை/பாஜக மேனேஜரை திமுக இறுதியாக அனுப்பியது முற்றிலும் தோல்வியடைந்தது. பொது மேடையில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட பாஜக தலைவர்கள் ஏராளம். பெண்களின் இடுப்பு கிள்ளப்பட்டது என்றால் பாருங்கள். திமுக பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரின் இடுப்பு கிள்ளப்பட்டது. மறக்காதீர்கள்." என கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிமுக - தவெக இடையே கூட்டணி ஏற்படும் என கூறப்படும் நிலையில், அதிமுக மூத்த முன்னாள் அமைச்சர்கள் விஜயை விமர்சிப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக காயத்ரி ரகுராம், விஜய்க்கு ஆதரவாக அண்ணாமலை வெளிப்படையாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications