"கடைக்கு போய்ட்டு என்னை வந்து பார்த்துட்டு போறாங்க..” MLA பேச்சுக்கு சபாநாயகர் கமெண்ட்டால் சிரிப்பலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில், வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ, தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அங்கு செல்பவர்கள் வந்து தன்னை பார்த்து தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். அதற்கு சபாநாயகர் அடித்த கமெண்ட் அவையை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று (ஆகஸ்ட் 31) 4 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் விக்னேஷ் தாக்கல் செய்து பேசினார். டாஸ்மாக் பணியாளர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

TASMAC Shop Near My Office Is a Nuisance DMK MLA s Remark Leaves Assembly in Splits

அமைச்சர் விக்னேஷ் பேசுகையில், "பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மதுக்கடைகளை மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். பின்னர், மதுக்கடைகளை மூடுங்கள் என்றும் கோரிக்கை வைத்தார்கள். இதில் வால்பாறை திமுக சட்டமன்ற உருப்பினர் குட்டி என்கிற சுதாகர் மட்டும்தான் வால்பாறைக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

அதற்கு வால்பாறை திமுக சட்டமன்ற உறுப்பினர் குட்டி என்கிற சுதாகர், "தற்போது வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே மாதா கோவில் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி இருப்பதால், அந்த டாஸ்மாக் கடையை மாற்றி வேறொரு பகுதியில் அமைத்துத் தர வேண்டும் என்றுதான் கேட்டேன்" எனத் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் விக்னேஷ், "வால்பாறை நகரத்தில் டாஸ்மாக் கடை அமைத்துத் தரப்படும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக வந்தவாசி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் பேசும்போது, "எனது வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளதால், கடைக்கு போவதற்கு முன்பாகவும், கடைக்கு போய்விட்டு வந்த பிறகும் என்னை வந்து மதுப்பிரியர்கள் பார்க்கின்றனர், அது எனக்கு பயங்கர தொல்லையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு போகும் வழியில் அந்தக் கடை உள்ளது. இதனால் அங்குள்ள டாஸ்மாக் கடையை மாற்றித் தர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்

அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், "கடைக்கு போகும்போதும் வரும்போதும் மது ஒழிப்பு பிரசாரம் ஈடுபடும் வகையில் மது ஒழிப்பு ஆலோசகர் ஒருவரையும் அங்கு நியமித்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்" என்றார். சபாநாயகரின் இந்தப் பேச்சால் சட்டசபையே சிரிப்பலையில் ஆழ்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+