டாஸ்மாக் திறக்கும் நேரம்.. டெட்ரா பாக்கெட்.. எதிர்ப்புக்கு பணிந்த அமைச்சர் முத்துசாமி அந்தர் பல்டி
சென்னை: 90 மில்லி லிட்டர் டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்வது பற்றி அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் திறக்கப்படும் நேரத்தில் எந்த வித மாற்றங்களும் செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளார். பலமுனை எதிர்ப்பை அடுத்து தற்போது டாஸ்மாக் திறக்கப்படும் நேரம் குறித்து மாற்றி பேசியுள்ளார் முத்துசாமி.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்தது ஏன் என்பது குறித்து சமீபத்தில் அரசு ஒரு சர்வே நடத்தியது. அப்போது ஏராளமானோர் 180 மில்லி லிட்டர் மதுவை பிரித்து குடிப்பதற்காக மதுக்கடை வாசலில் காத்திருப்பது தெரியவந்ததாக கூறினார். எனவே மது குடிப்போரின் வசதிக்காக 90 மில்லி லிட்டர் டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

டாஸ்மாக்கில் வருமானம் ஏன் குறைகிறது என்று ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் குடிப்பதை நிறுத்தி விட்டார்களா? அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் டாஸ்மாக் விற்பனை குறைகிறதா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்காக டார்கெட் நிர்ணயம் செய்யப்படுவது வருமானத்தை அதிகரிப்பதற்காக மட்டுமல்ல. விற்பனை ஏன் குறைகிறது அந்த பணம் வேறு எங்கே செல்கிறது என்பதை கண்டறிவதற்காகவும்தான்.
பாட்டில்களில் மது விற்பனை செய்வது பிரச்சினையாக உள்ளது. நீர்வழித்தடங்களில் போடுகின்றனர். சாலைகளில் போட்டு உடைக்கின்றனர். எனவே டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். டேமேஜ் ஆவது தவிர்க்கப்படும். டேமேஜ் ஆக வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
180 மில்லி மது பாட்டிலில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அதை ஒருவரே குடிக்க முடியாது. வேறு ஒருவருக்காக அரை மணி நேரம் கடை வாசலில் காத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. பக்கத்து மாநிலத்தில் விற்பனை செய்வது போல 90 மில்லி பாக்கெட் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை தற்போது பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் பார் உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரைக்கும் கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். இதுதான் தற்போது நடைமுறையில் உள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை வேலைக்கு செல்பவர்கள் கட்டிட வேலை, கடுமையான வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு என்ன ஏற்பாடு செய்யப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர். என்ன செய்வது என்று ஆலோசித்து உள்ளோம் ஆனால் முடிவு செய்யவில்லை. மது தேவை என்பவர்கள் இரவே வாங்கி வைத்து விடலாமே என்று கேட்டதற்கு அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது பயன்படுத்தி விடுவோம் என்று தெரிவித்தனர். குழந்தைகள் இருக்கிறார்கள் எனவே வீட்டில் மதுவை வாங்கி வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். அவர்கள் கோரிக்கை நியாமானதாகவே இருக்கிறது. குடிப்பதற்காக வேறு வழியை தேர்வு செய்து விடக்கூடாது என்றும் நாங்கள் ஆலோசித்து இருக்கிறோம் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் முத்துசாமியின் இந்த பேட்டி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை காலையிலேயே மாற்றினால் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அரசியல் கட்சியினர் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை மாற்றும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று கூறினார். அதே போல 90 மில்லி டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றும் கூறி தனது அறிவிப்பை தானே மாற்றி பல்டியடித்து பேசியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications