தமிழகம் முழுவதும் மூடப்படும் ’டாஸ்மாக்’ கடைகள்! மது பிரியர்களுக்கு ஷாக்..சற்றுமுன் வெளியான அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் 16.01.2026 (வெள்ளி கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 (திங்கள் கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

டாஸ்மாக் கடைகள்
குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
டாஸ்மாக் ட்ரை டே
இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர் 2, மே 1 தொழிலாளர் தினம் என 8 நாட்கள் "டாஸ்மாக் ட்ரை டே" என மூடப்படும். இது தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளுமே தேர்தல் சமயங்களில் மூடப்படும்.
திருவள்ளுவர் தினம்
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 16.01.2026 (வெள்ளி கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 (திங்கள் கிழமை) குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு டாஸ்மாக் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல். 1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல். 11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 16.01.2026 (வெள்ளி கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 (திங்கள் கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும்.
டாஸ்மாக் விடுமுறை 2026
அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக் கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications