டாஸ்மாக்கில் நாளை முதல் ஆன்லைனில் மதுபானம் வாங்கலாம்.. எப்படி? புதிய இணையதளம் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் சென்றால் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று மதுபானம் வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில் தான் நாளை முதல் டாஸ்மாக்கில் பிடித்த மதுபானத்தை வீட்டில் இருந்தே ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து நேரில் சென்று வாங்கி கொள்ளும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட உள்ளது.

இந்த இணையதளத்தின் பெயர் tasmac.tn.gov.in என்பதாகும். இந்த இணையதளம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த இணையதளம் சென்று தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட டாஸ்மாக்க கடைகளின் தற்போதைய மதுபான பிராண்டுகளின் இருப்பை அறிந்து அதனை பெற்று கொள்ளலாம்.

tasmac online

ஆன்லைனில் மதுபானம் வாங்க நினைப்போர் முதலில் இந்த இணையதளம் சென்று லாக்-இன் செய்ய வேண்டும். அப்போது அவர்கள் தங்களின் வயது 21 அல்லது அதனை தாண்டிவிட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு தாங்கள் இருக்கும் பகுதியில் 5 கிலோமீட்டர் அல்லது 20 கிலோமீட்டர் அல்லது டாஸ்மாக் கடை எண், மாவட்டம் உள்ளிட்டவற்றை பதிவிட்டு விரும்பும் டாஸ்மாக் கடைகளை தேர்வு செய்து பிடித்த மதுபானத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இதற்கான பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்.

இதுபற்றி டாஸ்மாக் நிர்வாகத்தினர் கூறுகையில், ''இந்த இணையதளம் மூலமாக ஒருவர் சென்னையில் இருந்தபடியே திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆன்லைனில் மதுபானம் வாங்க முடியும். முதலில் 'க்யூஆர் கோட்' உருவாகும். இந்த 'க்யூஆர் கோட்'டை டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்ட யார் கொண்டு சென்று காண்பித்தால் உடனடியாக மதுபானத்தை எம்ஆர்பி விலையிலேயே வாங்கி கொள்ள முடியும்.

இந்த இணையதளத்தில் எந்தெந்த மதுபானங்கள் இருப்பு உள்ளது என்பது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை அப்டேட் செய்யப்படும். ஒருவேளை முன்பதிவு செய்யும் மதுபானம் கிடைக்காவிட்டால் அதற்கான பணம் திரும்ப வழங்கப்படும். இல்லாவிட்டால் இன்னொரு டாஸ்மாக் கடைகளில் இருந்து குறிப்பிட்ட மதுபானத்தை வாங்கும் வசதி உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று 2 மொழிகளில் செயல்பட உள்ளது. அதோடு ஆன்லைனிலேயே ஒவ்வொரு மதுபானத்தின் எம்ஆர்பி விலை உள்பட பிற விவரங்கள் தெரிவிக்கப்படும். குறிப்பாக ஆன்லைன் முன்பதிவு செய்யும் டாஸ்மாக் கடைகள் இருக்கும் லோகேஷனுக்கான வழிக்காட்டவும் செய்யும்.

மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஆன்லைனில் மதுபானம் வாங்குவதும், வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் நடைமுறை உள்ள நிலையில் தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானம் வாங்கும் திட்டம் நாளை அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் மதுபானம் விற்பனையை ஊக்குவிக்க கூடாது. டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இப்படியான சூழலில் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+