Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஆர்சிடிசியில் தட்கல் டிக்கெட் புக்கிங் என்பது பெரிய ஜோக்.. இந்தியாவே பேசும் தமிழக நெட்டிசனின் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தட்கல் டிக்கெட் புக்கிங் கண்கட்டி வித்தை போன்றது. 11 மணிக்கு ஓபன் செய்தால் 11.03க்கு தட்கல் புக்கிங் குளோஸ் ஆகிவிடும்.. இல்லாவிட்டால் சைட் லோடுஆகும். அப்படியே ஓபன் ஆனாலும் பேமெண்ட் ஆப்சன் ஒர்க் ஆகாது. எல்லாம் சரியாக வருவதற்குள் 11.05க்கு வெயிட்டிங் லிஸ்டில் டிக்கெட் வேண்டுமா என்று கேட்கும்.. இல்லாவிட்டால் பணத்தை எடுத்துவிட்டு டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் காட்டும்.. இதுபற்றி பலரும் புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஐஆர்சிடிசி இதுவரை இந்த விவகாரத்தில் பெரிதாக நடவடிக்கை எடுக்கவே இல்லை. தட்கல் புக்கிங் என்பதே ஒரு வகை மோசடி என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்று பலரும் யூடியூப் பார்த்திருப்பீர்கள். நிறைய கட்டுரைகள் படித்திருப்பீர்கள். ஆனால் எல்லாம் ஓரளவு கைகொடுத்தாலும், உண்மையில் உங்களால் வெள்ளிக்கிழமை இரவு கோவைக்கு சேரன் அல்லது நீலகிரி எக்ஸ்பிரஸில் செல்லவோ அல்லது மதுரைக்கு பாண்டியனில் அல்லது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லவோ தட்கலில் முன்பதிவு செய்துவிட முடியுமா?

Tatkal ticket booking on IRCTC is a big joke Tamil Nadu netizen s post

உங்களால் தென்மாவட்ட ரயில்கள், மேற்கு மாவட்ட ரயில்களில் வார இறுதியில் சென்று வர தட்கல் டிக்கெட் முன்பதிவு அவ்வளவு எளிதாக செய்துவிட முடியாது. ஏன் டிக்கெட் கிடைக்கும் என்று உறுதியாக ஒருவரால் கூற உறுதியாக முடியாது.. ஏனெனில் தட்கல் டிக்கெட்டை பொறுத்தவரை பெரும்பாலும் டிக்கெட் முன்பதிவு செய்துவிட முடிவது இல்லை..

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, சிலர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அதன்படி, தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர், ஏற்கனவே மாஸ்டர் லிஸ்டை (பயணிகள் லிஸ்டை) ஐஆர்சிடிசி தளத்தில் பதிவு செய்வார்கள். அடுத்ததாக, ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதுபொதுவாக கடைசிநேரத்தில் லாக் இன் செய்யாமல், 10.50க்கு மேல் 10..55க்குள் முயற்சி செய்வார்கள். ஆனால் நடைமுறையில் 10.57க்கு மேல் ஐஆர்சிடிசி தளம் 11.10 வரை ஓபனே ஆவது இல்லை. ஒருவேளை இந்த சிக்கலை நீங்கள் எதிர்கொள்ளவில்லை என்றால், பேமெண்ட் ஆப்சனில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பெரும்பாலான பேமெண்ட் ஆஃப்சன்கள் ஒர்க் ஆகாமல் எரர் என்று வரும். பலரால் இன்று வரை ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருக்கும். அதேநேரம் புரோக்கர்களால் எளிதாக முன்பதிவு செய்ய முடிவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் புரோக்கர்களின் ஆதிக்கம் இருப்பதாகவும், அவர்களே மொத்தமாக டிக்கெட்டுகளை எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. முக்கிய வழித்தடங்களில்,மக்கள் அதிகம் பயணிக்க விரும்பும் வழித்தடங்களில் அரசு மக்களுக்கு எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முனைவர் வேலுமணி என்ற நெட்டிசன் வெளியிட்ட பதிவில், ஐஆர்சிடிசியில் தட்கல் டிக்கெட் புக்கிங் என்பது மிகப்பெரிய ஜோக். சீட்கள் இருப்பதாக காட்டும். 10மணிக்குஅப்படியே மாறும். 10.01க்கு வெப்சைட் அப்படியே ஹேங்க் ஆகிவிடும். 10.03க்கு அப்படியேஅனைத்து சீட்டும் போய்விடும்... 10.04க்கு அப்படி மறுபடியும் ஐஆர்சிடிசி இணையதளம் சூப்பராக வேலை செய்யும்" என்று கூறியிந்தார்.
கிட்டத்தட்ட 11 மணிக்கு தட்கல் ஓபன் செய்தாலும், 11.03க்கு மொத்த டிக்கெட்டும் போன பின்னரே தட்கல் புக்கிங் செய்வோருக்கு முயற்சி செய்வதற்கு கூட முடிவதாக புகார்கள் உள்ளது. தட்கல் டிக்கெட்டில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+