பச்சை குத்தியதால் பறிபோன கனவு.. நாட்டுக்கு சேவையாற்ற நினைத்த மதுரை கல்லூரி மாணவருக்கு நடந்த சோகம்
மதுரை: ராணுவத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற தன் கனவு நிறைவேறாமல் போனதால், அந்த மாணவர் எடுத்த முடிவு தற்போது மதுரையையே உலுக்கியுள்ளது. கையில் பச்சை குத்தியிருந்ததால் ராணுவத்தில் வேலை நிராகரிக்கப்பட்ட கல்லூரி மாணவர் வேதனையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். மதுரையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தத்தனேரி அருள்தாஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் என்பவருடைய மகன் யோகசுதீஷ். 17 வயதே ஆன யோகசுதீஷ், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ராணுவ வேலையில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் யோகசுதீஷ் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசை
இதற்காக தீவிர உடற்பயிற்சிகளிலும் யோகசுதீஷ் ஈடுபட்டு உள்ளார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, காலையில் எழுந்ததும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி என ராணுவத்தில் சேருவதற்கான உடல் தகுதியுடன் பிட் ஆக இருக்க பல்வேறு உடற்பயிற்சிகளையும் செய்து வந்துள்ளார் யோகசுதீஷ்.
இந்த நிலையில்தான் ஈரோட்டில் நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் யோகசுதீஷ் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரது கையில் பச்சைக் குத்தியிருந்ததை பார்த்த ராணுவ அதிகாரிகள், அவரை நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. ராணுவ வேலையில் சேர வேண்டும் என்ற தனது கனவு, கையில் குத்திய பச்சையால் தகர்ந்து போனதே என்று மிகுந்த மனவேதனையில் யோகசுதீஷ் கடந்த சில நாட்களாக இருந்தாராம்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், யோகசுதீஷ் தற்கொலை செய்துக்கொண்டார். வீட்டில் வந்து பார்த்த பெற்றோர் மகன் எடுத்த விபரீத முடிவால் கதறி அழுதனர். யோகசுதீஷ் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
கையில் பச்சைக் குத்தியிருந்த காரணத்தால், ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் நிராகரிக்கப்பட்டதே தற்கொலையின் காரணம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் கை மற்றும் உடலில் பச்சைக் குத்திக்கொள்வதை பார்க்க முடிகிறது. ஆர்வ மிகுதியாலும் ஸ்டைலாக இருக்கும் என நினைத்துக்கொண்டும் இளைஞர்கள் பலரும் பச்சைக் குத்திக்கொள்கிறார்கள். ஆனால், இதுபோன்ற பச்சைக் குத்திக்கொள்வதால் சில நேரங்களில் எதிர்காலத்தில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
முறையாக பயிற்சி பெறாமல் சாலையோரம் பச்சைக் குத்துபவர்களிடம் கொடுத்து பச்சை குத்திக்கொள்வதால், ரத்தத்தின் வழியாக பரவக்கூடிய கொடிய நோய்களும் பரவும் அபாயம் உள்ளது.
இது ஒருபக்கம் என்றால், ராணுவம் போன்ற அரசு வேலைகளிலும் நிராகரிக்கப்படக்கூடிய நிலை சில நேரங்களில் இருப்பதால், எனவே இன்றைய தலைமுறை இளைஞர்கள் இதையெல்லாம் உணர்ந்து செயல்படுவது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தற்கொலை தீர்வு அல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண் e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications