இது லிஸ்ட்லயே இல்லையே.. TCS நிறுவனத்திலா இப்படி.. ஆடிப்போய் கிடக்கும் ஐடி ஊழியர்கள்
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஐடிநிறுவனமான டிசிஎஸ், ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணிநீக்கம் செய்வது அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. ஜூலை மாதம் 2% ஊழியர்களை (சுமார் 12,000 பேர்) பணிநீக்கம் செய்யப்போவதாக டிசிஎஸ் அறிவித்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 30,000-க்கும் அதிகமாக உள்ளது என்றும், இது வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் ஊழியர்கள் என்கிற நிலை வர கூட போகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் பற்றி ஐடி ஊழியர்களை தாண்டி பலருக்கும் தெரிந்திருக்கும். ஏனெனில் இந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அரசு வேலை போல் செட்டில் ஆகிவிடலாம் என்பது பலரது கனவு. உலகம் முழுவதும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட (607,979) தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை செய்கிறார்கள். ஆறு கண்டங்களிலும் 55 நாடுகளிலும் டிசிஎஸ் நிறுவனம் இருக்கிறது. 2025 நிதியாண்டின் இறுதியில் 30 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 2.64 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

என்ன நடக்கிறது
ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தில் இப்போது முன்பு இல்லை என்ற புகார்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக அக்டோபர் 2024 முதல் நிலைமை மாறிவிட்டதாம். ரத்தன் டாடா இறந்ததிலிருந்து அந்நிறுவனத்தில் பணி நீக்கம் என்பது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஏஐ வளர்ச்சி பிறகு படிப்படியாக ஏராளமான பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி டிசிஎஸ் ஊழியர்கள் மற்றும் பிற ஐடி நிறுவன ஊழியர்கள் பலர் ரெட்டிட் என்ற சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறி விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் கூறி சில கருத்துக்களின் தொகுப்பினை பார்ப்போம்.
"ஃப்ளூடிட்டி லிஸ்ட்" (Fluidity List)
டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியர் வெளியிட்ட கருத்துபப்டி,, டிசிஎஸ் ஒரு "ஃப்ளூடிட்டி லிஸ்ட்" என்ற பட்டியலை பராமரித்து வருகிறதாம். இந்தப் பட்டியலில் உள்ள ஊழியர்கள் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தப்படுகிறார்களாம்
பணிநீக்கம்
ஒரு ஊழியரை உடனடியாக ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம், அந்த ஊழியருக்கு எந்தவிதமான நோட்டீஸ் காலமும் அல்லது பணிநீக்கச் சலுகைகளும் (severance pay) கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது.
புதிய வேலைக்கு சேர்த்தல் குறைவு
ஒரு பக்கம் நிறுவனம் ஆட்குறைப்பு செய்து வரும் வேளையில், பணியமர்த்தலுக்கான ஆஃபர் லெட்டர்கள் (offer letters) தாமதமாவது மற்றும் கடைசி நேரத்தில் வேலைக்கான உத்தரவாத கடிதங்களை ரத்து செய்வது போன்ற நிகழ்வுகளும் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
டிசிஎஸ் நிலைப்பாடு என்ன
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே.கிருத்திவாசன், இந்த ஆட்குறைப்பு செயற்கை நுண்ணறிவால் (AI) ஏற்பட்டதல்ல என்றும், திறமைப் பற்றாக்குறை மற்றும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். எனினும் பணி நீக்கம் மற்றும் கடுமையான விமர்சனங்கள் குறித்து டிசிஎஸ் எந்த பதிலும் ஊடகங்களுக்கு அளிக்கவில்லை. அதேநேரம் இத்தகைய நடவடிக்கைகள் அறமற்றவை என்றும், கொடுமையானவை என்றும் ஊழியர்கள் கொந்தளிக்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications