TCS ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. ஜூன் 7 ம் தேதி இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் ஜூன் 6ம் தேதி சென்னையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

தற்போது ஐடி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

tcs-hiring-for-dotnet-developer-role-in-chennai-and-interview-on-june-7

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது டாட்நெட் டெவலப்பர்(Dotnet Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணியை விரும்புவோருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை .NET அல்லது தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் இருக்க வேண்டும். ASAP or .NET Asure உள்ளிட்டவற்றின் வெப் அடிப்படையில் அப்ளிகேஷன்கள் டெவலப் செய்த அனுபவம் இருக்க வேண்டும். MS SQL சர்வரியில் பணியாற்றியது மற்றும் MySQL அறிவை பெற்றிருக்க வேண்டும்.

Agile Developement-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பல்வேறு அப்ளிகேஷன்ஸ் தொடர்பான டிசைன், கேட், டெஸ்ட் உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இன்ஜினியரிங் டீம் மற்றும் புராடக்ட் டீம் ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கான இண்டர்வியூஎன்பது சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னையில் ஜூன் 7 ம் தேதி இண்டர்வியூ நடைபெறுகிறது. இண்டர்வியூ நடைபெறும் நேரம் உள்ளிட்ட விண்ணப்பம் செய்வோருக்கு இ-மெயில் அல்லது போன்கால் மூலம் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+