சம்பள உயர்வு வெறும் ரூ.422 மட்டும் தான்.. ஊழியருக்கு TCS கொடுத்த ஷாக்.. நெட்டிசன்கள் தந்த ஐடியா
சென்னை: டாடா குழுமத்தை சேர்ந்த டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கு மாத சம்பள உயர்வாக ரூ.422 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிருப்தியடைந்து வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் பிற நிறுவனங்களில் பணியாற்றுவோர் அவருக்கு முக்கிய அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். இதனால் அந்த பதிவு வைரலாகி வருகிறது.
டிசிஎஸ் ஐடி நிறுவனம் 12,000 ஆயிரம் பணியாளர்கைள பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தான் டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், ‛‛டிசிஎஸ் சார்பில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும். இதன்மூலமாக எங்களின் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கும் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சராசரியாக 4.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்கும். High Performers என்றால் ஊதிய உயர்வு இரட்டை இலக்க சதவீதத்தில் இருக்கும்'' என்று தெரிவித்து இருந்தது.
இதனால் ஊழியர்கள் அனைவரும் ஹேப்பியாகினர். ஆனால் பல ஊழியர்கள் டிசிஎஸ் ஊதிய உயர்வால் அதிருப்தியடைந்துள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை என்று வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. அதில் தற்போது ஒரு பதிவு ஐடி ஊழியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பொதுவாக ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான வேலை இருந்தாலும் சம்பளம் கிடுகிடுவென உயரும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும்.
ஆனால், தற்போது டிசிஎஸ் நிறுவனம் அந்த ஊழியருக்கு ஊதிய உயர்வாக மாதம் ரூ.422 மட்டுமே வழங்கி உள்ளது. இதுபற்றி அந்த ஊழியர் தனது ‛ரெடிட்' வலைதள பக்கத்தில் பதிவிட்டு புலம்பி உள்ளார். சம்பள உயர்வு தொடர்பான கடிதத்தின் போட்டோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது:‛‛
டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். 2021ம் ஆண்டில் பணிக்கு சேர்ந்தேன். முதல் 2 ஆண்டுகள் சப்போர்ட் புராஜெக்ட்டில் பணியாற்றினேன். அப்போது மேனேஜர்கள் அதிகமாக திட்டுவார்கள். அவமானப்படுத்துவார்கள். ஆனால் அதனை கடந்து வந்தேன். அடுத்த 2 ஆண்டுகள் டெவல்மென்ட்டில் பணியாற்றினேன். புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஆனாலும் மனம் நிறையவில்லை.
ஏனெ்னறால் எனக்கான எக்போசர் இல்லை என்று கருதினேன். இருப்பினும் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். ஆனால் தற்போது 2024-25ம் ஆண்டுக்கான சம்பளமாக மாதத்துக்கு ரூ.422 மட்டுமே கொடுத்துள்ளது. அதுவும் 6 மாதங்கள் கழித்து வந்துள்ளது. இது டாக்சிசிட்டி. இது வேர்கடலைக்கான சம்பளம். நான் தவறு செய்துவிட்டேன். கடந்த 4 ஆண்டுகளாக இதே நிறுவனத்தில் இருந்து விட்டேன். நிறுவனத்தில் டாக்ஸிசிட்டி இருப்பதாக நினைத்தால் உடனடியாக வெளியேறுங்கள். எனக்கு நடந்தது உங்களுக்கான விழிப்புணர்வு காலாக இருக்கட்டும்.
நான் வேலைகளை செய்து அழுதத்தை்த சுமந்து பணி செய்னே். ஆனால் அதற்கான வெகுமதி எனக்கு கிடைக்கவில்லை. இந்த ரூ.422 சம்பளம் உயர்வு எனக்கான பெரிய அடி. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் திறமையை அறிந்து வைத்து கொள்ளுங்கள். தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். மேலும் தேவையென்றால் உடனடியாக நிறுவனங்கள் மாறுங்கள்'' என கூறி புலம்பி இருந்தார்.
இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் பணியை மாற்றும்படி அறிவுரை வழங்கி வருகின்றனர். இதுதொடர்பாக ஒருவர், ‛‛எனக்கு 12 சதவீதத்தை விட குறைந்த சம்பளம் இரண்டு முறை வந்தது. நான் உடனடியாக நிறுவனம் மாறினேன். ஒருமுறை 8 சதவீதம் அளவுக்கு சம்பளம் கிடைத்தது. அடுத்த 3 மாதத்தில் பணி மாறினேன். நீங்களும் முயற்சி செய்து பணியை மாற்றம் செய்யுங்கள்'' என்று கூறியுள்ளார்.
இன்னொருவரோ, ‛‛உங்கள் நிலைமைக்கு நீங்களே பொறுப்பேற்று கொண்டு அதனை கடந்து சென்று முன்னேற பாருங்கள். ஏனென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் வடிவமைத்து கொள்வது நமது பொறுப்பாகும். என்னை எடுத்து கொண்டால் நான் ஒன்றும் இல்லாமல் தொடங்கி 4 ஆண்டுகளில் வருடத்துக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் இருந்து ரூ.21 லட்சம் சம்பளம் வரை உயர்ந்தேன்'' என்று கூறியுள்ளார்.
மற்றொருவரோ, ‛‛நான் ஒருமுறை எனது சம்பளத்தை பார்த்து உடைந்து விட்டேன். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று எனது மேனேஜர் சொல்லி திட்டினார். அடுத்த 3 மாதத்தில் எனக்கு நல்ல ஆஃபர் வந்தது. அதனால் காத்திருக்க வேண்டாம். இது வேலைகளுக்கு ஆட்களை எடுக்கும் காலமாக உள்ளது. இதனால் புதிய பணிகளை அப்ளை செய்யுங்கள்'' என்று கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications