’வா சினிமாவுக்கு போலாம்’ வாட்ஸ் அப்பில் தொல்லை கொடுத்த ஆசிரியை! பள்ளி மாணவன் செய்த அல்டிமேட் சம்பவம்
சென்னை: பள்ளி மாணவன் ஒருவரிடம் அவனுக்கு வகுப்பு எடுக்கும் பெண் ஆசிரியை, சினிமாவுக்கு போகலாமா? என்று வாட்ஸ்ப் அப்பில் அழைத்த சம்பவம் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதே ஆன அந்த மாணவன், தன்னை ஆசிரியை சினிமாவுக்கு அழைத்த வாட்ஸ் அப் பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. நெட்டிசன்களும் கடும் கோபத்தில் பதிவுகளை போட்டு வருகிறார்கள்.
இணையத்தில் வைரலாக இந்த பதிவு பரவி வரும் நிலையில், மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்று கொடுக்கும் ஆசிரியையே இப்படி நடந்து கொண்டால் என்னத்தை சொல்வது என்று நெட்டிசன்கள் தலையில் அடிக்காத குறையாக பதிவிட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

விருப்பம் இருந்தால் சொல்லவும்..
ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் பள்ளி மாணவன் ஒருவர், தனது ஆசிரியை தன்னை சினிமாவுக்கு அழைத்த பதிவுகள் அடங்கிய வாட்ஸ் அப் ஸ்கீரின் ஷாட்டை பதிவிட்டுள்ளார். மாணவரிடம் அந்த ஆசிரியை, நாளைக்கு உனக்கு ஒரே ஒரு வகுப்பு மட்டுமே இருப்பதால், படம் பார்க்க விருப்பம் உள்ளது. விருப்பம் இருந்தால் சொல்லவும், நான் அரைநாள் லீவு எடுக்கிறேன்" என்று கேட்டுள்ளார்.
ஆசிரியையின் இந்த பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர், ஆசிரியையுடன் சண்டை போடாமல், தர்மசங்கடமான சூழலை அழகாக கையாண்டு இருக்கிறார். அதாவது, மாணவன் அளித்த பதிலில், மேடம் உண்மையாகவே என்னை மன்னித்துவிடுங்கள், எனக்கு என் நண்பர்களுடன் சேர்ந்து வேறு பிளான் போட்டுவிட்டோம். எனவே பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று பதிவிட்டு இருந்தார்.
மாணவன் போட்ட பதிவு
மாணவன், சொல்லியும் அடங்க மறுத்த ஆசிரியையோ, அந்த திட்டத்தை தள்ளிவைத்துவிட்டு, முடிவை மறு பரிசிலனை செய்யுமாறு கேட்டு இருக்கிறார். ஆனால், மாணவனோ, தனது முடிவில் இருந்து கொஞ்சம் கூட பின்வாங்காமல் தீர்க்கமாக ஆசிரியைக்கு பதிலளித்துள்ளார். அந்த மாணவன் அளித்த பதிலில், என்னை மன்னித்துவிடுங்கள் மேடம், ஏற்கனவே திட்டத்தை முடிவு எய்துவிட்டோம்" என்று கூறி உங்களுடன் அவுட்டிங் வர முடியாது என தீர்க்கமாக கூறிவிட்டார்.
இந்த உரையாடல் அடங்கிய பதிவை ரெட்டிட் இணையதளத்தில் பதிவிட்ட மாணவர், எனக்கு 18, அவருக்கு (ஆசிரியைக்கு 28-29) என நினைக்கிறேன். இதை வைத்து கேலி செய்பவர்கள் அனைவருக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பாலினங்கள் மட்டும் மாறி இருந்திருந்தால், நீங்களும் இதேபோல்தான் எதிர்வினையாற்றியிருப்பீர்கள் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கடும் கோபம்
நெட்டிசன்கள் பலரும், ஆசிரியையின் செயல்பாட்டை கடுமையாக கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள். சில நெட்டிசன்கள், அந்த பள்ளி மாணவர் உடனடியாக இந்த விவகாரத்தை தங்கள் பள்ளி நிர்வாகத்திடம் எடுத்து செல்ல வேண்டும் எனவும், இதுபோன்ற ஆசிரியைகள் பணிக்கு தகுதியற்றவர்கள் எனவும் காட்டமாக கூறியுள்ளனர்.
மேலும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் உயரிய பொறுப்பு பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. புனிதமான இந்த பதவியில் இருந்து கொண்டு அதை அவமதிக்காதீர்கள் என தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சில நெட்டிசன்களோ, பள்ளி மாணவர் இந்த விஷயத்தை கையாண்ட விதத்தை பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications