Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று போராட்டம் இல்லை.. அறிவிப்பை திடீரென வாபஸ் பெற்ற ஆசிரியர்கள் சங்கம்.. இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்ட அறிவிப்பை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் இன்று (அக்டோபர் 13) போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

Teachers have withdrawn the notice of protest after talks with Minister Anbil Mahesh Poiyamozhi

இதையடுத்து டிட்டோ ஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருந்தன. இந்த போராட்டத்தில் 10000 பேர் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான டிட்டோஜாக் அறிவித்திருக்கிறது.

நேற்று காலை ஆசிரியர் சங்கத்தினரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 11 கோரிக்கைகளுக்கு இசைவு தெரிவித்தார். இதையடுத்தே போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆசிரியர்களின் போராட்டத்திற்குப் பதிலாக சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் அறிவித்துள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+