1996 ஆசிரியர் பணியிடங்கள்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடவாரியாக காலிப்பணியிடங்களை www.trb.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதோடு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 ம் தேதி வரை ஆசிரியர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதெடார்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்களுக்கான அறிக்கை (எண் 02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் www.trb.tn.gov.in வாயிலாக இன்று(10.07.2025) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள்

தமிழ் - 216
ஆங்கிலம் - 197
கணிதம் - 232
இயற்பியல் - 233
வேதியியல் - 217
தாவரவியல் - 147
விலங்கியல் - 131
வணிகவியல் 198
பொருளியல் - 169
வரலாறு - 68
புவியியல் - 15
அரசியல் அறிவியல் - 14
கணினி பயிற்றுநர் நிலை I - 57
உடற்கல்வி இயக்குநர் நிலை I -102 என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வற்கான அனைத்து விவரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலான விண்ணப்பிக்கும் போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications