காதலன் கூப்பிட்டதுமே நம்பி பின்னாடி போன 18 வயது பெண்! ஒரே அறையில் 10 பேர்? விக்கித்த தெலுங்கானா
சென்னை: பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை இயற்றினாலும், நாளுக்கு நாள் கொடுமைகள் நடந்தவண்ணம் உள்ளது..
டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியை சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஒருவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரது தோழி ஒருவர் கடந்த 10-ந் தேதி இளம்பெண்ணை, மற்றொரு நண்பரின் வீட்டுக்கு பார்ட்டிக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு மதுவில் போதைப்பொருள் கலந்து கொடுத்துள்ளனர்.

இதை குடித்ததால் அரை மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை அங்கிருந்த 4 ஆண்கள், கழிவறைக்கு தூக்கி சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்தகொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர்..
ஆனால் நேற்றைய தினம், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் செய்யவும், அதுகுறித்த விசாரணையை துவக்கியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட 4 நபரையும் தேடி வருகிறார்கள்.
அரங்கேறும் கூட்டு பாலியல் பலாத்காரங்கள்
இந்த பாலியல் சம்பவம் தலைநகரையே உலுக்கி எடுத்து வரும்நிலையில், மற்றொரு சம்பவம் தெலுங்கானாவில் நடந்து, பொதுமக்களை அதிர வைத்து வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஜனகாமுக்கு அருகே உள்ளது ஜங்கான் என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் 18 வயது பெண் ஒருவர், அதே பகுதியில் வசித்து வரும் முகமது ஒவைசி என்ற 23 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக பழகினாலும், நாளடைவில் இருவரும் காதலிக்க துவங்கினர்.
காதலியை வரவழைத்த காதலன்
கடந்த மாதம் தன்னுடைய காதலியை சந்தித்து பேசிய ஒவைசி, உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி வெளியே அழைத்துள்ளார்... காதலன் அழைக்கவும், அந்த பெண்ணும், அவர் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, காதலனுடன், அவரது நண்பர்கள் பவன்குமார், சிவக்குமார், அப்துல் கியூம், சாய் சரண் ரெட்டி, சாய்ராம், நுகலா ரவி, பூஜா சமந்த் ரெட்டி, ஜெட்டி சஞ்சய் ஆகியோர் இருந்துள்ளனர்.
அவர்களை எல்லாம் பார்த்து இளம்பெண் குழப்பமானார்.. தன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று இவர்களை எல்லாம் ஏன் ஒவைசி அழைத்துள்ளார் என்று யோசித்தார்.. எனினும், காதலன் இருப்பதால், அதை பற்றி எதுவும் கேட்காமல் இருந்துவிட்டார்,. பிறகு இளம்பெண்ணையும், நண்பர்களையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார் ஒவைசி.
லாட்ஜில் நடந்த கொடுமை
ஜன்கனில் ஒரு லாட்ஜுக்கு சென்று, ரூம் எடுத்து, இளம்பெண்ணுடன் தங்கினார்.. பிறகு அந்த அறைக்குள் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக, அப்பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிவிட்டு, வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டனர்.
அந்த அதிர்ச்சியிலிருந்து இளம்பெண் மீள முடியாமல், அவர்கள் மிரட்டியதால், சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளானார்..
கோவாவில் கொடூரம்
இந்நிலையில், அந்த 10 பேர் கொண்ட கும்பலில் ஒரே ஒருவர் மட்டும், மீண்டும் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, கோவாவுக்கு சென்று தன்னுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியிருக்கிறார்.. இதற்கு இணங்காவிட்டால் கொலை செய்வதாகவும் மிரட்டியிருக்கிறார்.. இதனால் வேறு வழியின்றி அந்த நபருடன் இளம்பெண் கோவா சென்றுள்ளார்.
அங்கு ரூம் எடுத்து, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர், மீண்டும் சொந்த ஊருக்கே அவரை அனுப்பி வைத்தார்.. ஏற்கனவே மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த இந்த பெண், கோவா நிகழ்வுக்கு பிறகு மேலும் நிலைகுலைந்து போனார்.. பிறகு உடனடியாக நடந்த சம்பவம் அனைத்தையும் தன்னுடைய சகோதரியிடம் அழுது சொல்லியிருக்கிறார்.
10 பேருமே கூண்டோடு கைது
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரி, உடனடியாக போலீசுக்கு செல்வதே நல்லது என்று அறிவுறுத்தி அழைத்து சென்றார்.. பாதிக்கப்பட்ட பெண் தந்த புகாரின்பேரில், பலாத்காரம் செய்த 10 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் தற்போது அடைத்துள்ளது.. அவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..
இளம்பெண்ணை ஏமாற்றி கடத்தி சென்று பலாத்காரம் செய்த இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications