"அரசுக்கே வார்னிங் தந்து வீடியோ.." சிறுமிகளிடமும் ஆபாச சீண்டல்.. கேமர் மதனின் பதற வைக்கும் பக்கங்கள்
சென்னை: பாலியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் யூ டியூப் கேமர் மதனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர் தலைமறைவாகி உள்ள நிலையில் போலீசார் இவரை தேடி வருகிறார்கள்.
Recommended Video
யூ டியூபில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளின் ட்ரிக்குகளை சொல்லி தருவதாக சேனல் நடத்தி வந்தவர்தான் யூ டியூப் கேமர் மதன். இவரின் யூ டியூப் பக்கத்தில் பேசப்பட்ட விஷயங்கள், இன்ஸ்ட்டாகிராமில் இவர் நடந்து கொண்ட விதம் இவைதான் தற்போது யூ டியூப் கேமர் மதன் சர்ச்சையில் சிக்க காரணம்.
யூ டியூபில் லைவ் வீடியோவில் பெண்களிடம் தவறாக பேசுவது, கெட்ட வார்த்தை சொல்வது, வீடியோ சாட்டிற்கு அழைப்பது, சிறுமிகளை கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று இவர் அத்துமீறிய நிலையில் தற்போது போலீசார் இவரை தேடி வருகிறார்கள்.

தேடல்
ஆனால் கெட்ட வார்த்தை பேசுவதை தாண்டி இவர் மீது வேறு சில புகார்களும் கூட வைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான விஷயம் டெலிகிராமில் வீடியோ விற்பனை செய்தது. டெலிகிராமில் சிறுமிகள், பெண்கள் ஆகியோரின் பாலியல் வீடியோக்களை காசுக்கு விற்று இருக்கிறார் மதன். இவ்வளவு பணம் கொடுத்தால் இந்த வீடியோ என்று சிறுமிகளின் வீடியோக்களை விற்பனை செய்து வந்து இருக்கிறார்.

தனி ஆள் இல்லை
இவர் தனியாக இயங்காமல் பல குழுவாக இயங்கி வருகிறார். இவர் குழுவில் இருக்கும் மற்ற நபர்கள் பொது வெளியில் முகத்தை காட்டி உள்ள நிலையில், மதன் மட்டும் தன்னுடைய முகத்தை வெளியில் காட்டியது இல்லை. மதன் எப்படி இருப்பார், அவரின் உண்மையான தோற்றம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. தன்னை அண்டர் கவர் தாதா தொடக்கத்தில் இருந்தே மறைமுகமாக வெளியே காட்டாமல் சுற்றி இருக்கிறார்.

ஒரே போட்டோ
இவரின் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே இணையத்தில் வெளியாகி உள்ளது. கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருக்கும் வடமாநில ஊழியர்களின் ஆதார் அட்டைகளை வைத்து பேடிஎம் கணக்குகளை தொடங்கி, அதற்கு பணம் அனுப்ப சொல்லி, எந்த இடத்திலும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இவர்கள் டெலிகிராமில் வீடியோ விற்று உள்ளனர்.

பாலியல் தொல்லை
அதிலும் சில சிறுமிகளின் புகைப்படங்கள் இவர்களிடம் சிக்கிய நிலையில் அதை வைத்தும் மிரட்டி பணம் பிடுங்கி இருக்கிறார் மதன். மதன் மீது பல்வேறு ஊர்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமிகள் என்பதால் சிலர் நேரடியாக வந்து புகார் அளிக்க அஞ்சுகிறார்கள். நேற்று மாலைக்குள் இவர் போலீசிடம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால்
ஆனால் போலீசில் ஆஜராகாமல் அப்படியே தலைமறைவாகி இருக்கிறார். நேற்று புளியந்தோப்பு சைபர் காவல்நிலையத்தில் முன்னிலையில் ஆஜராகவில்லை. இப்போது இவரை போலீசார் தேடி வருகிறார்கள். அதோடு இவரின் குழுவில் இருக்கும் மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இது போக இவர் பல பேரிடம் நிதி மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கேம்
கேம் விளையாட பொருட்கள் வாங்க வேண்டும் என்று நிதி மோசடி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் மூலம் பெண்களை ஏமாற்றி நிதி மோசடி செய்து இருக்கிறார். இவர் கண்டிப்பாக தனி நபராக இருக்க முடியாது. இவருக்கு பின் பெரிய சப்போர்ட் அல்லது கூட்டம் ஏதோ இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அரசுக்கே வார்னிங்
இவர் மத்திய, மாநில அரசுகளை கெட்ட வார்த்தையில் திட்டியது தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. பப்ஜி விளையாட்டை தடை செய்ததற்காக மத்திய மாநில அரசுகளை இவர் மோசமான வார்த்தைகளில் திட்டி இருக்கிறார், கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு அரசை கண்டித்து கேமர் மதன் மோசமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வருடம்
கடந்த வருடம் அரசை மோசமாக பேசிய இவரின் இந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. இப்படிப்பட்ட மதன்தான் தற்போது அரசுக்கே சவால்விடும் வகையில், போலீஸ் ஆஜராகி அழைத்தும் கூட ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளார். சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் தற்போது இவரை தேடி வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் இவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications