நடிகர் விக்னேஷ்.. "டேய்***".. பதறியடித்து கொண்டு வெளியிட்ட வீடியோ.. அப்ப எல்லாமே பொய்யா? என்னாச்சு
சென்னை: பிரபல நடிகர் விக்னேஷை ஞாபகம் இருக்கா? அவர் பேசியதாக, ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைகேட்டு தமிழக மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
90'களில் கொடி கட்டி பறந்த ஹீரோக்களில் மிக முக்கியமானவர் விக்னேஷ்.. கிராமத்து கதைகள் என்றாலே, நம் கண் முன்னே வந்துநிற்கும் யதார்த்தமான உருவம்.. மிகைப்படுத்தப்படாத நடிப்பு.. மனதில் வந்து ஒட்டிக்கொள்ளும் இயல்பான தோற்றம்.
இவையெல்லாம்தான் விக்னேஷை சின்னத்தாயி படத்திலேயே தமிழக மக்களின் மனதில், விரைவாய் கொண்டுபோய் சேர்த்தது.. தாய்க்குலங்கள் மத்தியில் பேராதரவினை பெற்றார்...
கிழக்கு சீமையிலே: தொடர்ந்து கிழக்குச்சீமையிலே, நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை, என்னைத் தாலாட்ட வருவாளா, போன்ற படங்களில் தனக்கான இடத்தையும் எட்டிப்பிடித்துவிட்டார். ஆனால் அதை தக்கவைக்க தவறிவிட்டார். பாரதிராஜாவின் பசும்பொன், பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லா போன்ற படங்கள் அவர் நடிப்பில் வெளியான முக்கியமான படங்களாகும்..

மாயம்: கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தவர், பிறகு திடீரென விக்னேஷ் மாயமானார்.. மறுபடியும் தயாரிப்பாளராக , வில்லனாக சினிமாவிற்குள் என்ட்ரி தந்துள்ளதாக தெரிகிறது.. ஆனால் இவரை பற்றின செய்திகள் மீடியாவில் அவ்வளவாக வராமலேயே இருந்த நிலையில், விக்னேஷை சினிமாவில் காணமுடிவதில்லையே என்ற கேள்வி எழுந்தபோது திடீரென, தொழிலில் ஏற்பட்ட ஏமாற்றம் என்ற புகாருடன் போலீசுக்கு ஓடினார் விக்னேஷ்.. அப்போதுதான் தமிழக மக்களின் கவனத்தை மீண்டும் பெற்றார்.
பரபரப்பு புகார்: "சதுரங்க வேட்டை" பட பாணியில் தாம் ஏமாற்றப்பட்டதாக பகீரை கிளப்பினார்.. இரிடியம் மோசடி கும்பலிடம் தானும், தன்னுடைய நண்பர்களும் ரூ.1.81 கோடி பணத்தை இழந்து விட்டோம் என்றும், அந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனுவையும் தந்தார்.. இதற்கு பிறகு விக்னேஷ் குறித்த செய்திகள் அவ்வளவாக வெளிவரவில்லை.
தற்போது, டிவி சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு, இவர் மீதான ஒரு சர்ச்சை புகார் கிளம்பியது.. சாதி வெறியை விக்னேஷ் உமிழ்ந்ததாக கூறி, விசிக உள்ளிட்ட தரப்பினர் இவரை கடுமையாக சாடினார்கள்..
வன்னி அரசு: விசிகவின் வன்னி அரசு ட்வீட் ஒன்றினை பதிவிட்டு, அத்துடன் ஒரு ஆடியோவையும் டேக் செய்திருந்தார்.. அதில், நடிகர் விக்னேஷ். பல படங்களில் நாயகனாக, துணைப்பாத்திரங்களாக நடித்தவர். இப்போது எந்த படங்களும் இல்லாததால் ஏதோ வணிகம் செய்கிறார் போல. எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள். தமிழ்நாடு காவல்துறை" என்று குறிப்பிட்டு தமிழ்நாடு போலீசுக்கும் இந்த ட்வீட்டை டேக் செய்திருந்தார் வன்னியரசு.
அந்த ஆடியோவில், விக்னேஷ் யாரோ ஒருவரை சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசியதும் பதிவாகியிருந்தது.. இதையடுத்து, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் விக்னேஷை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க தொடங்கின. இதனிடையே, ஆடியோவில் விக்னேஷிடம் பேசிய பாதிக்கப்பட்ட நபர், ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.
ஆடியோ: இவர், விக்னேஷின் உதவியாளராம்.. ஊதியம் விஷயத்தில் இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போதுதான் சாதிய ரீதியாக அந்த ஊழியரை விக்னேஷ் தரக்குறைவாக பேசியதாக அந்த நபர் குற்றஞ்சாட்டினார்.. "700 ரூபாய் சம்பளத்துக்கு விக்னேஷ் சார் 100 ரூபாய்தான் கொடுத்தாரு. மீதி சம்பளத்தைக் கேட்டதுக்கு சாதியைச் சொல்லித் திட்டுறாரு" என்று அந்த உதவியாளர் பரபரப்பு பேட்டி தந்திருந்தார்.
விசிகவின் வன்னி அரசு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், நடிகர் விக்னேஷ். பல படங்களில் நாயகனாக, துணைப்பாத்திரங்களாக நடித்தவர். இப்போது எந்த படங்களும் இல்லாததால் ஏதோ வணிகம் செய்கிறார் போல. எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள். தமிழ்நாடு காவல்துறை" என்று குறிப்பிட்டு தமிழ்நாடு போலீசுக்கும் இந்த ட்வீட்டை டேக் செய்திருக்கிறார்.. ஆடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
ஆடியோ: அதுவும், அந்த ஆடியோவுல நூறு, இருநூறு கொடுக்கலைன்னு பேசிக்கிறாங்க. எனக்கு வேற பையன் தான் அசிஸ்டென்ட்டா வந்துக்கிட்டிருந்தான். அவன் வரமுடியலைன்னுதான் இந்த பையனை அனுப்பி வெச்சான். அப்பவே சொன்னேன் புது பையன்லாம் செட்டாகாதுன்னு. 'கிராஜுவேட் முடிச்சிருக்கேன். ரூம் வாடகை கட்டமுடியல. அசிஸ்டென்ட் டைரக்டரா வரணும்'ன்னு சொன்னதாலதான் கூட்டிக்கிட்டு போனேன். ரெண்டுமணி நேரம்தான் ஷூட்டிங்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ள விக்னேஷ், குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.. அது தன்னுடைய குரல் இல்லை என்றும், அந்த குரலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை.. நான் அப்படிப்பட்ட கேரக்டரே கிடையாது. மனசு நோகாம பார்த்துப்பேன். புடிக்கலைன்னா ஒதுங்கிப்போயிடுவேன். அப்படிப்பட்ட நான் எப்படி சாதி ரீதியா பேசுவேன்?" என்று குற்றச்சாட்டை மறுத்து பேசியுள்ளார் விக்னேஷ்.
விளக்கம்: இதனிடையே, விக்னேஷ் தன் பேச்சுக்கு மன்னிப்பு கோரியதாகவும் ஒரு செய்தி வலம்வருகிறது. நடிகரும் - பாஜக பிரமுகருமான விக்னேஷ் வன்னியரசுவை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி, உதவியாளர் விஷயத்தில் தான் நடந்து கொண்டது தவறு தான் என்பதை உணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இருவேறு தகவல்கள் வலம்வருவது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications