பைத்தியம்.. டிவி விவாதத்தில் திட்டிய பெண் தொகுப்பாளர்.. "F***".. வார்த்தையை விட்ட நடிகர்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் சிறப்பு விருந்தினரை மோசமாக திட்ட., அதற்கு விருந்தினர் கெட்ட வார்த்தையில் பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிவி சேனலில் நடைபெற்ற அந்த மோதல் பற்றி பார்க்கும் முன் அந்த நடிகர் செய்த காரியம் ஒன்றை பற்றி பார்க்கலாம். பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வாக் சென். இவர் அர்ஜுனன் கல்யாணம் இன் அசோகவனம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் சாலையில் சென்று கொண்டு இருந்த போது ஹைதராபாத்தில் நதி சாலையில் அவரின் காரை ரசிகர் ஒருவர் வழி மறித்தார். காருக்கு முன் படுத்துக்கொண்டு எழுந்திருக்க மறுத்தார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதையடுத்து விஷ்வாக் சென் கீழே இறங்கி அந்த ரசிகரிடம் பேசினார். அப்போது அந்த ரசிகர் கையில் வைத்து இருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய் போன்ற திரவத்தை மேலே ஊற்றி.. உங்கள் படம் வெற்றிபெற வேண்டும்.. இல்லையென்றால் நான் சாக போகிறேன் என்று கூறினார். அந்த பாட்டிலை கையில் இருந்து வாங்கிய விஷ்வாக் சென் அந்த ரசிகரை காப்பாற்றினார். கேட்க எப்படி நன்றாக இருக்கிறதா? ஆனால் இத்தெளலாம் பிராங்க் என்று சொன்னால் நம்புவீர்களா?

 என்ன பிராங்கா?

என்ன பிராங்கா?

ஆம் விஷ்வாக் சென்தான் தன்னுடைய அர்ஜுனன் கல்யாணம் இன் அசோகவனம் படத்திற்காக இந்த புரொமோஷனை செய்துள்ளார். பிராங்க் மூலம் வீடியோவை வைரலாக்கி படத்திற்கு விளம்பரம் தேட இப்படி செய்துள்ளார். அவரின் கையில் இருந்தது மண்ணெண்ணெய் கேன் கிடையாது. ப்ளூ நிற தண்ணீர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது.

 விவாதம்

விவாதம்

இந்த சம்பவம் தெலுங்கு சினிமா உலகை உலுக்கிய நிலையில் இது பற்றிய விவாத நிகழ்ச்சி ஒன்று டிவியில் நடைபெற்றது. அப்போது விஷ்வாக் சென்னிடம் தொகுப்பாளர் தேவி நாகவல்லி, கடுமையான கேள்விகளை கேட்டார். அதோடு விஷ்வாக் சென்னை நீங்கள் ஒரு மன அழுத்தம் கொண்ட நபர்.. நீங்கள் ஒரு பாகல் சென் என்று குறிப்பிட்டார். விஷ்வாக் சென்னை கிண்டல் செய்யும் வகையில் பாகல் சென் என்று விஷ்வாக் சென்னை நாகவல்லி கிண்டல் செய்தார்.

கிண்டல்

கிண்டல்

பாகல் என்ற படத்தில் விஷ்வாக் சென் நடித்து இருந்தால்.. பாகல் என்றால் பைத்தியம் என்பதால் விஷ்வாக் சென்னை நாகவல்லி அப்படி விமர்சனம் செய்தார். சாலையில் இப்படி தரமற்ற பிராங்க் வீடியோ செய்வது பைத்தியக்காரத்தனம்தான் என்றும் நாகவல்லி தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்தார். இதனால் கோவம் அடைந்த என்னை பார்த்து நீ எப்படி அப்படி சொல்லலாம் என்று கோபமாக கேட்டார்.

பதில்

பதில்

இதற்கு நாகவல்லி.. வெளியே போ.. கெட் அவுட் என்று கத்தினார். தொடர்ந்து விஷ்வாக் சென் கெட் அவுட்.. கெட் அவுட் என்று கத்திக்கொண்டே இருந்தார். இந்த நிலையில்தான் அந்த நடிகர் விஷ்வாக் சென் கோபம் அடைந்து.. "F***ing you.. என்னை நீங்கள் இங்கே அழைத்துவிட்டு.. இப்போது அவமானப்படுகிறீர்களா? உங்கள் ஸ்டுடியோவில் இருக்கவே எனக்கு விருப்பம் இல்லை, என்று கடுமையாக குறிப்பிட்டார். இன்னொரு பக்கம் நாகவல்லி திட்டிக்கொண்டே இருந்தார்.

மோதல்

மோதல்

இருவருக்கும் இடையில் நடந்த இந்த மோதல் வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் மேயர் விஜயலட்சுமி இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து.. அந்த நடிகரை விமர்சனம் செய்துள்ளார். அதே சமயம் நெட்டிசன்கள் பலர்.. அந்த நடிகர் பிராங்க் செய்தது தவறு. ஆனால் அதே சமயம் அந்த தொகுப்பாளர் அப்படி பேசியதும் தவறு என்று விமர்சனம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+