வேலூரில் நியூஸ் ரீடராக அம்மன்.. இளைஞர்களின் புதிய பேனர் கலாச்சாரம்.. போலீசுக்கு போன இந்து முன்னணி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீசுந்தரி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோயிலின் ஆடித் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ளது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் கிராமத்து இளைஞர்கள், பக்தர்கள் மனம் புண்படும் வகையிலும் மதரீதியாகப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையிலும் பொது இடங்களில் அனுமதியின்றி ஏராளமான பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இளைஞர்களால் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்களில், கூலிங் கிளாஸ் அணிவித்தும், டாக்டராகவும், நியூஸ் ரீடராகவும் பல வகையான வடிவங்களில் அம்மனைச் சித்தரித்துள்ளனர். அதோடு, "வயசு பசங்க நாங்க.. உங்க இன்ஸ்டா ஐடி தாங்க", "எங்களை பகைச்சா ஹாஸ்பிட்டல்ல சிகிச்சை" போன்ற பஞ்ச் டயலாக்குகளையும் இடம்பெறச் செய்துள்ளனர். இளைஞர்களின் இந்த பஞ்ச் பேனர்கள் தங்கள் பகுதியில் தேவையில்லாத சச்சரவுகளை உருவாக்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Temple festival in Vellore Youths display banner featuring controversial slogans about the Goddess

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், "திருவிழா என்பது எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒன்றாகச் சங்கமிப்பது மட்டுமின்றி, மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது. ஆனால், இப்போது மதுவும் பிளக்ஸ் பேனரும்தான் திருவிழா என்ற நிலை மாறிவிட்டது. அதுவும் முன்பு எல்லாம் குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் திருவிழாவை பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டது. இப்போது சமுதாயத்தைப் பிரதிபலிக்கவும் எதிர்தரப்பினரைக் கேலி செய்யவும்தான் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது வளர்ச்சியடைந்து, வழிபடும் அம்மனையே கேலிச்சித்திரமாகச் சித்தரிக்கும் வகையில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இவற்றுக்கெல்லாம் கடிவாளம் போட்டால்தான் நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாக்கப்படும்" என்றனர்.

இவ்வாறு அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டுமென, இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மகேஷ் வேதனையுடன் காவல்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இது சமுதாயத்தில் மோதல்களை உருவாக்கக் கூடும் என்பதாலும், தெய்வங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாலும், மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துப் பேனர்களைத் தடை செய்ய வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் வழக்குப்பதிவு செய்து வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் டிஜிட்டல் பேனர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இவ்வாறு டிஜிட்டல் பேனர்களை அச்சிடுபவர்கள் மற்றும் அதனை வைப்பவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறது? மேலும், டிஜிட்டல் பேனர்கள் வைக்க அந்தந்த உள்ளாட்சிகளிடம் பணம் கட்டி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் இந்த ஆட்சியில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. எனவே பேனர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றமே மீண்டும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+