இனி கூடுதல் விலைக்கு விற்க முடியாது.. செக் வைக்கும் டாஸ்மாக் நிர்வாகம்.. வெளியான மேஜர் அறிவிப்பு
சென்னை: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் தரப்பில் புகார்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முடிவு கட்ட மேஜர் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். பாட்டிலின் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், சில கடைகளில் கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாகவும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில மதுப்பிரியர்கள் ஆதங்கத்துடன் பதிவிடுவதை காண முடிகிறது.

தொடர்ந்து எழுந்து வரும் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை என டாஸ்மாக் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளது. தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படுகிறது. இந்த அனைத்துக்கடைகளிலும் ஸ்வைப்பிங் மெஷின்கள் நிறுவ வங்கிகளுக்கு அழைப்பு விடுத்து ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த புள்ளியில் பங்கேற்கும் வங்கிகளை தேர்வு செய்து பிறகு அனைத்து கடைகளிலும் ஸ்வைபிங் மெஷின்கள் அமைக்கப்படும் எனத்தெரிகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications