தென்காசியில் ரோட்டில் கிடந்த கால் கிலோ தங்கம்.. அப்படியே போலீசிடம் ஒப்படைத்த முதியவர்! நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி அருகே பாவூர்சத்திரம் பகுதியில் சாலையில் கிடந்த 250 கிராம் தங்க நகைகள், பணம் அடங்கிய பையை நேர்மையாக போலீசிடம் ஒப்படைத்த பாப்பையா என்ற முதியவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசும் முதியவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டம் அரியப்பப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பாவூர்சத்திரம் அருகே குருசாமிபுரத்தில் உள்ள தன் மகள் வீட்டுக்கு 250 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் அடங்கிய பையோடு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் தன் பைக்கில் வைத்திருந்த நகை, பணம் அடங்கிய பை மட்டும் கீழே விழுந்துள்ளது.

Tenkasi Elderly man 30 sovereigns gold jewellery lying on the road and honestly hands it over to the police

நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த முதியவர்

இதனை கவனிக்காமல் வீட்டுக்கு சென்ற சுப்பிரமணியன் நகைப்பை காணமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் பதறிப்போன அவர் தான் வந்த வழியிலும், அக்கம்பக்கத்தினரிடமும் சொல்லி தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே மேட்டூர் பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர் பாப்பையா அவ்வழியாக நடந்து சென்ற போது பை ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார்.

அதில் நகை பணம் இருந்ததால் உடனே வீட்டுக்கு சென்ற அவர் தன் மகனை அழைத்துக்கொண்டு பாவூர்சத்திரம் காவல்நிலையம் சென்றார். அங்கு நகைப்பை கீழே கிடந்ததாகவும், உரியவரிடம் ஒப்படைக்குமாறும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். பையில் 250 கிராம் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் பணம் இருந்துள்ளது. இதனால் நகையை உரியவரிடம் ஒப்படைக்க போலீசார் விசாரனையில் இறங்கினர்.

போலீஸ் பாராட்டு

அதற்குள் நகைப்பையை கண்டுபிடிக்க முடியாததால் சுப்பிரமணியன் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுப்பதாக வந்தார். இதையடுத்து அவர் தான் நகைக்கு சொந்தக்காரர் என்பதை உறுதி செய்த போலீசார் அவர்களிடம் நகைகளை ஒப்படைத்தனர். இதையடுத்து நேர்மையாக நகைகளை ஒப்படைத்த பாப்பையாவை நேரில் அழைத்து போலீசார் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி கூறுகையில், விவசாயியான பாப்பையா என்னிடம் வந்து நான் சாலையில் நடந்து வந்த போது ஒரு பை கிடந்தது. அதில் தங்க நகைகள், பணம் இருந்தது. இது பற்றி அக்கம்பக்கத்தில் கேட்டேன். ஆனால் யாரும் இந்த பை குறித்து சொல்லவில்லை. இதனால் உங்களிடம் கொடுக்கிறேன்.

சால்வை அணிவித்து பாராட்டு

நீங்கள் உரியவர் யார் என கண்டுபிடித்து கொடுத்துவிடுங்கள் என்று நகைகளை கொடுத்து சென்றார். அவர் சென்ற சில மணி நேரங்களில் சுப்பிரமணியன் வந்து நகை அடையாளங்கள் எல்லாவற்றையும் கூறினார். இதையடுத்து நகையின் எடை மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை சரியாகத் தெரிவித்த சுப்பிரமணியனிடம் இதனை ஒப்படைத்தோம்" என்றார்.

இது தொடர்பான தகவல் அப்பகுதி முழுக்க தீயாய் பரவிய நிலையில் சமூக வலைத்தளத்தில் பலரும் முதியவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இதை அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசும், விவசாயி பாப்பையாவை நேரில் வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சாலையில் கிடந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 35 லட்சம் இருக்கும் நிலையில், அதை நேர்மையாக ஒப்படைத்த முதியவரின் செயலை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+