பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்!
சென்னை: அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் பாஜகவுக்கு வழங்கப்படும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மேற்கு மண்டலம், தென் தமிழகத்தில் அதிக இடங்களை பாஜக பெற இருப்பதாகத் தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நாள் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர், விருகம்பாக்கம், வானூர், திருச்செங்கோடு, அந்தியூர், பழனி, திருப்பூர், தெற்கு, சூலூர், அரவக்குறிச்சி, ராசிபுரம், குன்னூர், தளி, மொடக்குறிச்சி, கோவை வடக்கு, மதுரை தெற்கு, சிங்காநல்லூர், பல்லடம், குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோயில், விளவங்கோடு, மயிலாடுதுறை, சாத்தூர், திருச்செந்தூர், திருநெல்வேலி, திருத்தணி, கும்பகோணம் உள்ளிட்ட தொகுதிகளை விருப்பத் தொகுதிகளாக தேர்வு செய்துள்ளது பாஜக.
சாத்தூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், விருகம்பாக்கம், மதுரை தெற்கு, விளவங்கோடு, நாகர்கோவில், ராதாபுரம், திருப்பூர் தெற்கு, பல்லடம், பண்ருட்டி, கே.வி.குப்பம், சிவகங்கை, தளி, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு சில தொகுதிகளை அதிமுக கூட்டணியில் உள்ள பாமக மற்றும் அமமுக கட்சிகள் ஒரே தொகுதிகளை கேட்டு வருவதால் அந்த தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. சென்னையில் உள்ள வேளச்சேரி, தி.நகர் மற்றும் நாங்குநேரி தொகுதிகளை கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ச்சியாக கேட்டு வருவதால் விரைவில் முடிவுகள் எட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி இன்று கூறியுள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று இரவு அல்லது நாளைக்குள் உடன்பாடு கையெழுத்து ஆகும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்!












Click it and Unblock the Notifications