இதோடு 6வது முறை.. உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு!
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்னும் இந்த தேர்தல் நடக்காமல் உள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கு மேல் வழக்கு
முதலில் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் உள்ளாட்சி தேர்தலை 2017ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

மீண்டும் மீண்டும்
நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. மூன்று வருடமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கு இன்னும் நடந்து வருகிறது.

அதிகாரிகள் நியமனம்
உள்ளாட்சி பணிகளை கவனிப்பதற்காக தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள்தான் தற்போது பஞ்சாயத்து பணிகளை கவனித்து வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக்கு காலம் முடிந்ததால் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆனால் இவர்களின் பதவிக் காலம் ஒவ்வொருமுறை நிறையவடையும் போதும், நீட்டிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் தற்போது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பருடன் உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது இது ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6வது முறையாக உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்கு காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications