சென்னை ஏர்போர்ட்டில் 'டெர்மினல் 5' விரிவாக்கம்.. டெர்மினல் 3 திறப்பு.. ஏஏஐ அதிரடி திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தின் திறனை உயர்த்தவும், பயணிகள் தடையின்றி வந்து செல்லவும் 'டெர்மினல் 5' மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்டங்களை இந்திய விமானநிலைய ஆணையம் விரைவில் தயாரிக்க உள்ளது.

முன்னதாக 5வது டெர்மினல் முனையம் மற்றும் உயர்மட்டச் சாலைப் பாதையின் கட்டுமானம் குறித்தும், விமான நிலையத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்க, தமிழ்நாடு அரசுக்கும் AAI-க்கும் இடையே கடந்த வாரம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமான விஷயம் பேசப்பட்டுள்ளது.

Chennai Airport Airport

திட்டத்தின் பின்னணி என்ன?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, நகரத்திற்குப் புதிய இரண்டாம் விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்படும் வரை, தற்போதைய சென்னை விமான நிலையத்தையே விரிவாக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் நடந்த இரண்டாவது முக்கிய ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.

புதிய டெர்மினல் 5 விமான நிலையத்தின் உட்பகுதியில் (Airside) அமைய உள்ளதால், பயணிகள எளிதாக சென்னையில் இருந்து வர NH 32 (மாதா என்ஜினீயரிங் கல்லூரி அருகே) சாலையில் இருந்து 6 வழிப்பாதை மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

தொடக்கக் கட்டப் பணிகள்: தற்போது T5 டெர்மினல் மற்றும் அணுகு சாலைக்கான அடிப்படை வரைபடம் மட்டுமே தயார் நிலையில் உள்ளது. முழுமையான திட்டமிடுதல் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார். இந்த டெர்மினல் மற்றும் மேம்பாலத்தை முழுமையாகக் கட்டி முடிக்க சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகலாம். எனவே, இந்த விரிவாக்கத்திற்குப் பதிலாக மாநில அரசு நேரடியாக இரண்டாவது விமான நிலையத் திட்டத்திலேயே கவனம் செலுத்தலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

விமான நிறுவனங்களின் கோரிக்கை என்ன

இன்னொரு பக்கம், விமான எரிபொருள் மீதான 'வாட்' வரியைக் குறைக்க வேண்டும் என விமான நிறுவனங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால், மாநில அரசோ சென்னையிலிருந்து கூடுதல் விமானச் சேவைகளை இயக்க வலியுறுத்துகிறது. இருப்பினும், விமானச் சேவைகளை அதிகரிப்பது என்பது மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும் சம்பந்தப்பட்ட நிறுவனமும் எடுக்க வேண்டிய முடிவு என்பது குறிப்பிடத்தக்கது


டெர்மினல் 3 முனையம் குறித்து அப்டேட்

T3 எனப்படும் டெர்மினல் 3 ஒருங்கிணைந்த முனையப் பணிகள் சென்னை விமான நிலையத்தில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது‌. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) இந்த T3 முனையத்தை 2027 ஏப்ரல் மாதத்திற்குள் திறக்க திட்டமிட்டுள்ளது.₹2,467 கோடி செலவில், 86,135 சதுர மீட்டர் பரப்பளவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளுக்கான ஒருங்கிணைந்த முனையமாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.

இரண்டு கூடுதல் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளது.தற்போதுள்ள 18- உடன் மேலும் 20 புதிய சுய-செக்-இன் கியோஸ்க்குகள் சேர்க்கப்பட உள்ளது. மேலும் 48 புதிய செக்-இன் டெஸ்க்குகள் அமைக்கப்பட உள்ளது.ஏரோபிரிட்ஜ்களின் எண்ணிக்கை 14-லிருந்து 23 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. நான்கு புதிய பெல்ட்கள் சேர்க்கப்பட இருக்கிறது. டெர்மினல் 3 பணிகள் நிறைவு பெற்றால் சென்னை விமான நிலையத்தின் விமானக் கையாளுதல் திறன் ஒரு மணி நேரத்திற்கு 35-லிருந்து 45 ஆக அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+