பதறிய வேளச்சேரி.. 9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. குவிந்த தீயணைப்பு வீரர்கள்
சென்னை: வேளச்சேரியில் பிரதான சாலையில் உள்ள 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை பரவி வருவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் ரயில் நிலையம் அருகே 9 மாடி கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. சென்னை சில்க்ஸ் கடை அருகே கட்டப்பட்டு வரும் அந்த கட்டிடத்தில் 80 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் உள் அலங்கார பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ மள மளவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்குப் பரவியது. தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை பரவியது. இதனால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திற்கு அருகில் மிகப்பெரிய ஜவுளிக்கடை இருந்தது. அங்கு பொருட்களை வாங்க வந்த மக்கள் மற்றும் அருகில் குடியிருப்புகள் இருப்பதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர். கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியால், கட்டுமான தொழிலாளர்கள் அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். கட்டிடத்திற்கு உள்ளே இருந்தவர்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறியதாக தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் அச்சமடைந்தனர். தீ விபத்து காரணமாக கரும்புகை பரவி வருவதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications