Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல்லாங்குழி சாலை.. முட்டளவு தண்ணீரில் போகனும்.. டெஸ்லா கார் தாங்குமா? கலாய்த்த நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா தனது கடையை இந்தியாவில் திறந்துள்ளது. மும்பையில் முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒய் மாடல் கார்கள் அறிமுகம் ஆகியுள்ளன. டெஸ்லா கார்கள் எப்படி உள்ளது?, அதன் சிறப்புகள் என்ன? என பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து மீம்ஸ்களையும் தெறிக்க விட்டுள்ளனர்.

கூட்டத்தில் புதிதாக வந்து சேரும் நபரை பழையவர்கள் சேர்ந்து எப்படி கலாய்ப்பார்களோ அதேபோல, இந்திய சாலைக்கு எல்லாம் டெஸ்லா தாங்குமா? என்ற ரேஞ்சுக்கு கலாய்த்து வருகிறார்கள்.

உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தைகளில் கால் பதித்துள்ளது. சர்வதேச அளவில் மின்சார கார்கள் சந்தையில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறதோ என்றும் சொல்லும் அளவுக்கு டெஸ்லா நிறுவன கார்கள் பிரபலமாக உள்ளது. நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு டெஸ்லா இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது.

teslas-india-launch-sparks-online-debate-over-pricing-and-infrastructure

மும்பையில் டெஸ்லா கார் அறிமுகம்

நேற்று மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் டெஸ்லாவின் ஷோரூம் திறக்கப்பட்டது. டெஸ்லா நிறுவனத்தின் ஒய் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது இந்தியாவில் மகிந்திரா, டாடா ஆகிய நிறுவனங்கள் தற்போது மின்சார கார் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் டெஸ்லா நிறுவனங்களுடன் சந்தையில் போட்டியிட வேண்டி உள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த கார், 0-ல் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது. ஒருமுறை இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். 15 நிமிட சூப்பர் சார்ஜ் அம்சமும் உள்ளது. சூப்பர் சார்ஜில் சற்றேக்குறைய 250 தொலைவு வரை பயணிக்க முடியும்.

என்ன பாடு படபோகிறதோ

முக்கிய இடங்களில் 250 கிலோ வாட் மின் திறன் கொண்ட சூப்பர் சார்ஜர்களை நிறுவவும் டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இதன் விலை ரூ 59.86 லட்சம் (ஷோரூம்) ஆகும். ஐந்து பேர் பயணிக்க முடியும். டெஸ்லா காரின் சிறப்பம்சங்கள் கார் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அதே நேரத்தில் நேற்று நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

கூட்டத்தில் புதிதாக வந்து சேரும் நபரை பழையவர்கள் சேர்ந்து எப்படி கலாய்ப்பார்களோ அதேபோல, இந்திய சாலைக்கு எல்லாம் டெஸ்லா தாங்குமா? என்ற ரேஞ்சுக்கு கலாய்த்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் பல்லாங்குழி (குண்டும் குழியுமான) சாலையில் டெஸ்லா கார் நிற்பது போன்ற படத்தை பகிர்ந்து என்ன பாடு படபோகிறதோ டெஸ்லா என்று பதிவிட்டுள்ளர்.

செல்ஃப் டிரைவிங் மோட் என்ன ஆகுமோ?

அதேபோல, முழங்கால் அளவு தண்ணீரில் கார்கள் ஊர்ந்து செல்லும் படத்தை பகிர்ந்து டெஸ்லா மழைக்காலத்திற்கு தயாரகிவிட்டது என்றும் பகிர்ந்துள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறும் போது, 'காரை மேனுவலில் ஓட்டினாலே கடும் பாட வேண்டியிருக்கும். டெஸ்லாவின் செல்ஃப் டிரைவிங் மோட் என்ன ஆகுமோ?' என்று பதிவிட்டுள்ளார்.

செல்ப் டிரைவிங் மோடில் டெஸ்லா போயிவிட்டு ஓட்டை உடைசலாக திரும்பி வருவது போல வீடியோவையும் நெட்டிசன் ஒருவர் பகிர்நந்துள்ளார். இப்படியாக எக்ஸ் தளம் முழுக்க நெட்டிசன்கள் டெஸ்லா கார் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்திய சாலைகளில் தாக்கு பிடிக்குமா

சில நெட்டிசன்கள், "டெஸ்லா கார்களின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், 20-25 லட்சம் என்ற ரேஞ்சில் விலையை எதிபார்த்தவர்களுக்கு ரொம்பவே ஏமாற்றம்தான்.. ஏனெனில் 60 லட்சம் என்பது ரொம்பவே அதிக ரேட்.." என்று பதிவிட்டுள்ளார்கள்.

மொத்தத்தில் இந்திய சாலைகளில் டெஸ்லா திண்டாடுகிறதோ இல்லையோ நெட்டிசன்களிடம் சிக்கி திண்டாட ஆரம்பித்துவிட்டது என கார் பிரியர்கள் சிலர் ஜாலியாக கூறியுள்ளனர். சில நெட்டிசன்களோ இந்தியாவில் பல இடங்களில் தற்போது சாலை கட்டமைப்பு தரமாக மாறி வருகிறது எனவும் பதிவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+