தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை
சென்னை: தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானது என்பது வல்லுநர்கள் கருத்து. ஒன்று தடுப்பூசி, மற்றொன்று அதிகளவிலான கொரோனா பரிசோதனை.

அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே மாநிலத்தில் எத்தனை பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவாக கண்டறிய முடியும். அதன் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
இருப்பினும், நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பைக் குறைத்துக்காட்டப் பரிசோதனைகள் குறைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதேநேரம் தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பரிசோதனைகள் தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 9 பேர் உள்ளிட்ட 33,181 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவது ஒரு நல்ல நடவடிக்கையாகும். இதன் மூலம் மாநிலத்தில் வைரஸ் பரவல் விகிதம் எந்தளவு உள்ளது என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்க முடியும்.
அதேபோல மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதமும் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகே வைரஸ் பரவல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இன்று மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1264 பேர் 12 வயதுக்கு உட்பட சிறார்கள் ஆகும். கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் 148 சிறார்களுக்கு மட்டும் கொரோனா உறுதி செய்ய்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பாதிப்பு 1200ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications