TET Exam Result: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு.. பிப்ரவரி 2 முதல் சான்றிதழ் பெறலாம்
சென்னை: கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் அவர்களது தகுதிச் சான்றிதழ் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறையின் குறைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு பிப்ரவரி 2 தேதி மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in- தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் ஒன்று நவம்பர் 15 அன்றும், தாள் - II 16.11.2025 அன்றும் நடத்தப்பட்டது. தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in இல் நவம்பர் 25 ஆம் தேதியன்று Objection Tracker உடன் வெளியிடப்பட்டது.
தற்காலிக விடைக் குறிப்பிற்கு நவம்பர் 25 முதல் டிசம்பர் 3 ஆம் தேதி பிற்பகல் 5.00 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கொண்ட தேதிகளில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களது OMR விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அரசாணை (நிலை) எண் 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை, நாள் 28.01.2026 ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் அவர்களது தகுதிச் சான்றிதழ் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications