அவள் புது பாய் ப்ரண்டோடு ஹேப்பியா இருக்கா.. தற்குறி நான் அவள் நினைவோடு! யாரை சொல்கிறார் தாடி பாலாஜி?
சென்னை: நடிகர் விஜய்யின் தவெகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாடி பாலாஜி இணைந்தார். விஜய்யின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய தாடி பாலாஜி, தொடர்ச்சியாக தவெக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இதற்கிடையே அவரது வாட்ஸ்அப் போஸ்ட் ஒன்று இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். அவரது கட்சியில் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகிறார்கள்.

தாடி பாலாஜி:
அப்படிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தவர் தாடி பாலாஜி. சினிமா நடிகரான தாடி பாலாஜி, பிரபல தனியார் டிவி சேனலில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் புகழ் பெற்றவர். தொடக்கத்தில் திமுக சார்ந்த இருந்த அவர், விஜய் அரசியலுக்கு வந்தவுடன் அக்கட்சியில் இணைந்தார். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.. மேலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்ற தொடங்கினார்.
புஸ்ஸி ஆனந்த் தன்னை அழைத்ததாகவும் அங்குப் போனபோது பாலாஜியை மாநாட்டுக்கு வேலை செய்யச் சொல்லி விஜயே சொன்னதாகவும் தாடி பாலாஜி குறிப்பிட்டார். அதன் பிறகு தவெகவை விமர்சிப்போருக்கும் கூட கடுமையாகப் பதிலடி கொடுத்தார். குறிப்பாகத் தமிழிசை சவுந்தரராஜன், விஜய்யை விமர்சித்த போதும் கடுமையாகச் சாடியிருந்தார்.
விஜய் டாட்டூ
அதேபோல விஜய்யின் உருவத்தையும் கூட நெஞ்சில் டாட்டூ குத்தி, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இதுபோல டாட்டூ குத்தியபோது 7 மணி நேரம் வலித்ததாகவும் ஆனால் விஜய்காக அந்த வலியைத் தாங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே தவெக கட்சி நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. மாநிலம் முழுக்க மாவட்டச் செயலாளர்கள் பதவிகள் நிரப்பப்பட்டன. இதில் தாடி பாலாஜிக்கும் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு மாவட்டச் செயலாளர் உட்பட எந்தவொரு பொறுப்பு வழங்கப்படவில்லை.
மீம்:
இந்தச் சூழலில் தான் அவர் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அது தொடர்பான போட்டோவையும் தான் நெஞ்சில் பச்சை குத்தும் போட்டோவும் ஒப்பிட்டு மீம் ஒன்றைத் தனது வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.
தற்குறி நான்:
அதில், "அவளோ புது பாய் பிரண்டோடு ஹேப்பியா இருக்கா.. தற்குறி நானோ அவளின் நினைவோடு" என்ற இருக்கிறது. தாடி பாலாஜியின் இந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸ் குறித்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்











Click it and Unblock the Notifications