தாய் மாமன் தங்க மோதிரம்.. சென்னை, கோவைக்கு 89,955 மோதிரங்கள் பேக்கிங்.. யாருக்கு எப்போது கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற 15 முதல் தொடங்கப்பட உள்ளது.. இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 89,955 மோதிரங்கள் தயாராகி, சென்னை மற்றும் கோவையில் பேக்கிங் செய்து அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இதை பற்றின முக்கிய தகவல் ஒன்று வெளியாகி, கவனம் பெற்றுள்ளது..!!

"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பெண்களின் சமூக பாதுகாப்பு மற்றும் திருமண உதவித் திட்டங்களை மேம்படுத்தும் வகையில், அரசின் "வெற்றி" தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Thai Maaman Thanga Mothiram Scheme

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டத்தை முதலமைச்சர் நேரில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. குழந்தை பிறந்தவுடன் தாய்மாமன் தங்க மோதிரம் அணிவிக்கும் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் ஆண்டுக்கு சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

பட்ஜெட்டில் ரூ.560 கோடி நிதி

இந்தத் திட்டத்துக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தங்க மோதிரங்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்காக மாநிலம் முழுவதும் 107 மையங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டர் பணிகள் இரண்டு நகை நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஜோயாலுக்காஸ் குழுமத்துக்கு 70 சதவீதமும், கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு 30 சதவீதமும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஹால்மார்க் முத்திரை

இதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள தங்க மோதிரங்களை தயாரித்து, ஹால்மார்க் முத்திரை பெற்று, முறையாக பேக்கிங் செய்து சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டமாக ஆயிரக்கணக்கான மோதிரங்கள் ஏற்கனவே பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள நகைக்கடை நிறுவனங்கள் இப்போது தங்க மோதிரங்களை தயாரித்து அனுப்பும் பணியை தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக 89955 மோதிரங்களை தயாரித்து வழங்கும் பொறுப்பு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான மோதிரங்கள் "தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்" என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள பிரத்யேக பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன.

சென்னை, கோவை பேக்கிங்

சென்னை மற்றும் கோவையில் உள்ள 2 பிரத்யேக மையங்களில் மோதிரங்களை பேக்கிங் செய்து அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. அரசு தற்போதைய சந்தை விலையிலேயே தங்கத்துக்கான தொகையை செலுத்துகிறது.

அதேசமயம், மோதிரங்களை உற்பத்தி செய்வது, அவற்றுக்கு ஹால்மார்க் தரச்சான்று முத்திரை பெறுவது, பாதுகாப்பாக பேக்கிங் செய்வது மற்றும் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு விநியோகிப்பது போன்றவை ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 4 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் இப்போது தொடங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 15ம் தேதி அதிகாரப்பூர்வ தொடக்கத்துக்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருடந்தோறும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதால், குழந்தை பிறப்புடன் குடும்பங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் முக்கியமான புதிய திட்டமாக இது கவனம் பெற்றுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+