தள்ளிப்போகிறது தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்..செப்.15-ல் இல்லை! தமிழக அரசு திடீர் முடிவு.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப் போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய்யின் வெளிநாட்டு பயணத் திட்டத்தால் செப்டர்ம்பர் 15-இல் தாய் மாமன் தங்க மோதிரம் தொடங்கப்படாது எனவும், இந்த திட்டம் தொடங்கி வைப்பது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிர திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் நாளை லண்டன் செல்வதால் இத்திட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் வழங்கப்படுகிறது.

Thai Maman Gold Ring Scheme gold ring Arunraj Vijay

கடந்த சில நாட்களாகவே தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப் போக உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் அருண்ராஜிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம் தொடங்கி வைக்கப்படுவது தேதி தள்ளிப் போவது உண்மை தான்.

முதல்வர் விஜய் வெளிநாடு பயணம் காரணமாக இந்த திட்டத்தினை செப்டர்ம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்க முடியாத நிலை உள்ளது. செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பதாக கூறப்படுவது உறுதி இல்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியாகும். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை தொடங்கி வைப்பார்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+