தை மாத ராசி பலன் 2022: மேஷ ராசிக்காரர்களுக்கு தை மாதம் எப்படி இருக்கும்
தை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு பொன்னான மாதமாக அமைந்துள்ளது. நவ கிரகங்களும் அற்புதமாக அமைந்துள்ளதால் இந்த மாதம் சுபிட்சங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: தை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சுக்கிரன், மகர ராசியில் சூரியன், சனி, புதன், கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
கிரகப்பெயர்ச்சிகளைப் பார்த்தால் 1ஆம் தேதி மகர ராசியில் புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. 3ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்கிறார். 16ஆம் தனசு ராசியில் சுக்கிரன் வக்ரம் முடிகிறது. 22ஆம் புதன் வக்ர முடிவுக்கு வருகிறது. 30ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு பத்தாம் வீட்டில் சூரியன், சனி, புதன். பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன், குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

மேஷத்திற்கு தொழில் லாபம்
பத்தாம் வீட்டில் சூரியன், சனி, புதன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். எனக்கு ராஜா வா நான் வாழுறேன் என்று பாடப்போகிறீர்கள். ராஜயோகம் கை கூடி வரப்போகிறது. இரண்டாம் வீட்டில் ராகு எட்டாம் வீட்டில் கேது, செவ்வாய் லாப ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் அரசு வேலை தொடர்பாக நல்ல செய்தி வரும் புரமோசன் தேடி வரும்.

திருமண யோகம்
அப்பா வழி உறவினர்கள் உதவி கிடைக்கும். திருமண யோகம் தேடி வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுப காரியங்களுக்கு செல்வீர்கள். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு மன மகிழ்ச்சி சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுக்கு நல்ல கிப்ட் வாங்கித் தருவார். வேலை சார்ந்த விசயங்களில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.

ஆரோக்கியத்தில் அக்கறை
பாக்ய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் செவ்வாய் இணைந்து பயணம் செய்கின்றனர். சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவதால் சிக்கல்கள் நீங்கும். வருமானம் அபரிமிதமாக வரும். மாத பிற்பகுதியில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது நல்லது. சொத்து வாங்க நல்ல நேரம். வீடு வாங்கலாம் புது வீடு கட்டுபவர்கள் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

உயர்கல்வி யோகம்
மாணவ மாணவியர்களுக்கு தொட்டது துலங்கும் உயர்கல்வி யோகம் கை கூடி வரபப்போகிறது. ஆன்லைன் வகுப்புகளில் படிப்புகள் அற்புதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கை கூடி வரும். கை கால்கள் இடுப்புகளில் பிரச்சினை வரும். பணம் முதலீடுகளில் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். நிலையான நிரந்தரமான வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் கஷ்டப்பட்டவர்கள் இந்த மாதம் கடன்களை அடைக்கும் அளவிற்கு பணம் வரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை
திருமணத்தடை நீங்கும் காலம் வந்து விட்டது.பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி சொந்தங்கள் மூலம் உதவி கிடைக்கும். பொறுப்புகள் கை கூடி வரும் தைப்பூச நாளில் முருகப்பெருமானை வீட்டிலேயே வணங்க நன்மைகள் நடைபெறும். செவ்வாய்க்கிழமை துவரம்பருப்பு தானமாக கொடுப்பது நல்லது.
மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு தை மாதம் பொன்னான மாதமாக அமைந்துள்ளது. தை மாதம் 14ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி விடிகாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications