பொங்கல் ரயில் டிக்கெட் ரிசர்வேசன்.. சட்டுன்னு முடிஞ்சிருச்சே.. ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுமா?
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக ரயில்களில் டிக்கெட்டுகள் ரிசர்வேசன் தொடங்கிய 5வது நிமிடத்தில் முடிவடைந்ததால் வரிசையில் காத்திருந்த தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் டிக்கெட் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாகும்.
பண்டிகை வந்தாலே அதை குடும்பத்தோடும் உறவினர்களோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். நவராத்திரி, தீபாவளி, பொங்கல் பண்டிகை என வரிசையாக பண்டிகைகள் வர உள்ளன. தொடர் விடுமுறையும் வர உள்ளதால் படிக்கவும், வேலை செய்யவும் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

சென்னை, கோவை, திருப்பூர், உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தென்னக ரயில்வேயும் ரயில் முன்பதிவு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது.
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி போகி, 15ம் தேதி பொங்கல், 16ல் மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என தமிழர் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதன்படி நேற்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11ம்தேதி ரயிலில் பயணம் செய்யலாம். இன்று முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்யலாம். அதாவது ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை பயணம் செய்ய இன்று முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்துள்ளது.
அதன்படி, ஜனவரி 12ம் தேதி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஐந்தே நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு முடிந்தது. குறிப்பாக பொதிகை, பாண்டியன், நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது.
காலை 8 மணி முதலே ஏராளமானோர் முன்பதிவு செய்ததால் அனைத்து டிக்கெட்டுகளின் ரிசர்வேஷன் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. பலர் அதிகாலை 5 மணியில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காத்திருந்து முன்பதிவு செய்தனர். ஆனால் இணையதளத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்பதிவு செய்ததால் டிக்கெட் கவுன்ட்டர்களில் காத்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.
செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்வோர் ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி முன்பதிவு செய்வோர் தைத் திருநாளான ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 2000 முதல் 3000 வரை விற்பனையாகும் எனவேதான் பலரும் ரயில்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பவும் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வரவும் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் ரிசர்வேசன் செய்கின்றனர். போகிக்கு முதல்நாள் வரை டிக்கெட் ரிசர்வேசன் முடிந்து விட்டது. நாளைய தினம் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல, ரயில் டிக்கெட் முன் பதிவு கடந்த ஜூலை மாதம் துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications