தையூர் ஆணவக்கொலை! மகளின் காதலனை கொன்ற தவெக பிரமுகர் ஏழுமலை, கவுதம் கட்சியில் இருந்து நீக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவத்தில் சிக்கிய தவெக பிரமுகர் ஏழுமலை மற்றும் அவரது மகனை கட்சியில் இருந்து நீக்குவதாக தவெக தலைமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் குமாரவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சியை சேர்த்த சி. ஏழுமலை மற்றும் அவரது மகன் ஏ. கௌதம் ஆகிய இருவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு பதவியும் வழங்கப்படவில்லை. TVK Family இணையதளத்தின் மூலம் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளார்கள். தற்போது இவர்கள் இருவரும் சட்டத்திற்குப் புறம்பாகவும், கட்சியின் விதிமுறைகளை மீறியும் செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

Thaiyur Honor Killing TVK functionaries Ezhumalai and Gowtham expelled from the party

கட்சியில் இருந்து நீக்கம்

அதன் காரணமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற உரிமையிலிருந்து அதிகாரப்பூர்வமாக அவர்கள் இருவரும் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளின்படி மாநில, மாவட்ட, நகரம், பேரூராட்சி, ஒன்றியம், வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் அனைவரும் இனிமேல் இவர்களை அமைப்பின் பெயரால் எந்தவிதமான தொடர்பையும் அல்லது அமைப்பு சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

முகவரி கேட்பது போல்

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே தையூர் சின்னம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). இவர் அப்பகுதியில் தனியார் நிறுவன ஊழியராக வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக தையூரை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகளை பிரவீன்குமார் காதலித்து வந்துள்ளார். இந்த காதலை பெண் வீட்டார் ஏற்க மறுத்ததோடு பிரவீன்குமாரை கண்டித்ததாக தெரிகிறது. ஆனால் பிரவீன்குமார் தனது காதலில் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பிரவீன்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு தனது வீட்டு அருகே சாலை ஓரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சிலர் வந்தனர். அவர்கள் பிரவீன்குமார் அருகே காரை நிறுத்தி முகவரி கேட்பது போல் விசாரித்தனர். அப்போது பின்னால் நின்றிருந்த 3 பேர் பிரவீன்குமாரை சரமாரி அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை, 2 கைகள் மற்றும் முதுகு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

4 பேர் கைது

பிரவீன் குமாரை வெட்டிய கும்பல் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்றது.. தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரவீன்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கேளம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் தனது மகளை காதலித்ததால் ஏழுமலையே தனது உறவினர்கள் மூலம் பிரவீன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஏழுமலை (48), அவரது மகன் கவுதம், உறவினர்கள் மணிகண்டன் (31), நந்தீஸ் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிரவீன்குமார் கொலையில் முக்கிய புள்ளியான சதீஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+