தலையாறு: தமிழகத்திலேயே மிகவும் உயரமான நீர் வீழ்ச்சி.. சாகசம் நிறைந்த அருவி.. அழகுன்னாலே ஆபத்துதானே!
சென்னை: தேனி மாவட்டத்தில் உள்ள தலையாறு என்ற அருவியின் சிறப்புகள் என்ன? இந்த மலையின் உச்சிக்கு போக மிகவும் சவாலான காரியம் ஆகும்.
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி அருகே உள்ளது தலையாறு அருவி. இதை ஆங்கிலத்தில் Thalaiyar Falls or Rat Tail Falls என்று அழைக்கப்படுகிறது.
இதன் உயரம் 975 அடியாகும். இந்த அருவி மஞ்சளாறாக பாய்கிரது. இது தென் தமிழகத்தில் பாய்ந்து வரும் வைகையின் கிளை நதியாகும். இந்த அருவி தேனி மாவட்டத்தில் இருந்தாலும் கொடைக்கானலில் இருந்து பார்த்தால் கொள்ளை அழகாக இருக்கும்.

வியூ பாயிண்ட்
இதுதான் சிறந்த வியூ பாயிண்ட்டாக உள்ளது. தமிழகத்தில் உயரமான நீர்வீழ்ச்சி தலையாறுதான். இந்தியாவில் 9ஆவது உயரமான நீர்வீழ்ச்சியாகவும் உலகில் 267 ஆவது நீர்வீழ்ச்சியாகவும் இது அறியப்படுகிறது. வத்தலகுண்டு- கொடைக்கானல் மலை சாலையில் 3.6 கி.மீட்டர் தூரத்தில் டம்டம் பாறையில் இருந்து இந்த அருவியை பார்க்க வேண்டும். ஆஹா இயற்கையின் அழகு இதுதானா என்பது தெரியும்.

பனிமூட்டம்
அந்த நேரத்தில் பனிமூட்டம் ஏதும் இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். கருப்பான மலையில் ஆங்காங்கே செடிகள் முளைத்துள்ள நிலையில் வெள்ளை நிறத்தில் அதாவது பால் போன்ற வெள்ளை நிறத்தில் நீளமான ஒரு அடர்ந்த கோடு போல் தெரியும் இந்த தலையாறு அருவி. இந்த அருவிக்கு செல்ல சாலை வசதிகள் இல்லை. இதனால் இங்கு மக்கள் செல்ல முடியாது.

மலையேற்றம்
இந்த அருவிக்கு செல்ல மலையேற்றம் தெரிந்தவர்களால் முடியும். கடந்த 2006 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகள் இருவர் மலையேற்றத்தின் போது இறந்ததால் இங்கு மலையேற்றத்திற்கு அனுமதி இல்லை. கோடைக் காலங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது மஞ்சளாறு அணையிலிருந்து அருவியின் அடிபாகத்திற்கு செல்ல முடியும்.

மாமரங்கள்
இந்த இடத்தில் மாமரங்களும், உருளைக்கிழங்கு வயல்களும் பார்ப்பதற்கே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இங்கு சிறிய காமாட்சி கோயில் ஒன்று இருக்கிறது. பழனி மலையில் நிறைய உயரமான நீர் வீழ்ச்சிகள் உள்ளன. எலியின் வால் எப்படி அடர்த்தியாக இருந்து மெலிகிறதோ அது போல் இந்த அருவியும் இருக்கிறது என்பதால் இதற்கு எலி வால் அருவி என்ற பெயர் ஏற்பட்டது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ்












Click it and Unblock the Notifications