Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் ரசிகர்களால் வியப்படைந்த தமிழகமும், பெங்களூரும்.. தடபுடல் பிறந்த நாள் #விலையில்லாவிருந்தகம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விலையில்லா விருந்தகத்தை ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்-வீடியோ

    சென்னை: நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரது 45வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தை தமிழகத்திலும் கர்நாடகாவின் பெங்களூருவிலும் ஆரம்பித்து பொதுமக்களுக்கு இன்று காலை உணவினை வழங்கி அசத்தினர்.

    நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ம் தேதி ஆகும். அவரது பிறந்த நாளை அன்றே சிறப்பாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள் பல்வேறு நல திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

    thalapathy vijay fans gives free foods to people in all over tamilnadu by vilaiyella virunthagam

    இந்நிலையில் தற்போது தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் சென்னை, மதுரை, கடலூர், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, பெங்களூரு உள்பட பல்வறு இடங்களில் பொதுமக்களுக்கு இன்று காலை உணவினை வழங்கி அசத்தினர்.

    வட சென்னை விஜய் ரசிகர்கள் சார்பில் விலையில்லா விருந்தகம் சென்னை கொருக்குபேட்டையில் அமைத்துள்ளனர். இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் அடித்துள்ள பேனரில், தளபதி விஜயின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு, தினமும் 109 நபர்களுக்கு விலையில்லா காலை உணவு வழங்கப்படும் என்றும் காலை 7.35 மணி முதல் காலை 8.35 வரை உணவு வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்கள்.

    விஜய் ரசிகர்களின் விலையில்லா விருந்தகம் டுவிட்டரில் டாப் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்லும் அனைவரையும் விஜய் ரசிகர்கள் பாராட்டி புகழ்ந்து வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+