கையில் பாட்டில்.. ஹெட்செட்.. ரிலாக்சாக பல்பு கொடுக்கும் விஜய்.. மாஸ்டர் சிங்கிள் போஸ்டர் குறியீடு!
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு 'ஒரு குட்டி கதை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் போஸ்டர் இன்று வெளியானது. இந்த போஸ்டரில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படம் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது
மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க விஜயை மட்டும் சுற்றி சுழலும் கதை என்று கூறுகிறார்கள். அதனால் இந்த படத்திற்கு மாஸ்டர் என்று பெயர் வைத்துள்ளனர்.

பாடலின் தலைப்பு
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வரும் 14ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பாடலே ஒரு மார்க்கமான தலைப்போடுதான் இருக்கிறது. ஒரு குட்டி கதை என்பது நடிகர் விஜயின் டிரேட் மார்க் வசனம். நடிகர் விஜய் எல்லா இசை வெளியீட்டு விழாவிலும் குட்டி கதை சொல்வது வழக்கம். இந்த கதை சுவாரசியமாக இருக்கும். அதே சமயம் நிறைய அரசியல் கருத்துக்களும் இதில் இருக்கும். தற்போது அரசியல் ரீதியாக விஜய் குறி வைக்கப்பட்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான், பாடலின் தலைப்பே குட்டி கதை என்று வைக்கப்பட்டுள்ளது அதிக வைரலாகி உள்ளது.

ரிலாக்ஸ் நண்பா
அதேபோல் வருமான வரித்துறை சோதனைக்கு பின் விஜய் கூலாக ரசிகர்கள் உடன் செல்பி எடுத்தார். அதேபோல் இந்த பாடலின் போஸ்டரிலும் விஜய் கூலாக போஸ் கொடுத்து இருக்கிறார் . ரிலாக்ஸ் நண்பா, நான் ஜாலியா இருக்கேன் என்பது போல போஸ் கொடுத்துள்ளார். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே.. தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு தலைவன் இருக்கிறேன் வருந்தாதே.. என்பது போல் விஜய் போஸ் கொடுத்துள்ளார்.

என்ன பல்பு
அதேபோல் விஜய் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே ஒரு பல்பு போஸ்டரில் இருக்கிறது. இந்த பல்பு யாருக்கு கொடுத்தது என்று ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள். விஜயை குறி வைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பல்புதான் இது என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குறியீடு பலரை கவர்ந்துள்ளது.

கையில் என்ன
இந்த படத்தின் முதல் போஸ்டர் 3டி முறையில் வடிவமைப்பட்டு இருந்தது. இது தலை சுற்றுவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. அப்போதே இந்த படம் போதை பொருள் தடுப்பு - மாபியா பற்றிய கதை என்று செய்திகள் வந்தது. தற்போது இருக்கும் போஸ்டரிலும் விஜய் கையில் சரக்கு பாட்டில் இருக்கிறது. விஜய் கெத்தாக அமர்ந்து இருக்கிறார். அவருக்கு பின்னே இருக்கும் வார்த்தைகள் சில தலை கீழாக இருக்கிறது.

வேறு என்ன
இதெல்லாம் போக லோகேஷ் கனகராஜின் சென்ற கைதி படமும் போதை பொருள் தடுப்பு பற்றிய படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் விஜய் சேதுபதி உடன் நடக்கும் சண்டை தொடர்பான புகைப்படமும் இதேபோல்தான் அமைந்து இருந்தது. அதனால் மாஸ்டர் படம் கண்டிப்பாக போதை பொருள், அது தொடர்பான மாபியா சண்டை பற்றிய படமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

லவ்
இந்த சிங்கிள் பாடல் பிப்ரவரி 14 வேலண்டைன்ஸ் தினம் அன்று வெளியாகிறது. அதனால் ஒருவேளை இந்த பாடல் காதல் பாடலாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கையில் சரக்கு வைத்துக்கொண்டு,ஹெட்செட் மாட்டிக்கொண்டு ஜாலியாக சுற்றும் கல்லூரி இளைஞராக இவர் நடித்து இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

பாடல் எப்படி
அதே சமயம் பாடலில் ஒரு குட்டி கதை என்று இருக்கிறது. பாடலை நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் எழுதி இருக்கிறார். அதனால் இந்த பாடலில் பெரும்பாலும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள். அரசியல் சார்ந்த புரட்சி கருத்துக்கள் இதில் இருக்கும். விஜயின் அரசியல் திட்டங்களை சொல்லும் வகையிலும் சிலரை கலாய்க்கும் வகையிலும் இந்த பாடல் இருக்கும் என்கிறார்கள்.. எப்படி இருந்தால் என்ன விஜய் - அனிரூத் கூட்டணியில் ஒரு ஹிட்டுக்கு வெயிட்டிங்!
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications