"அண்ணன் தளபதி".. விஜய்க்கு உதயநிதி சொன்ன "நச்" வாழ்த்து.. திடீர்ன்னு கிரீன் சிக்னலா.. அப்ப அதுதானோ?
சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்காக நடிகரும் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து சொல்லி இருக்கும் விதம் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து விஜய்க்கு இணையம் முழுக்க அவரது ரசிகர்கள் காலையில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியா முழுக்க அவருக்கு இருக்கும் ரசிகர்களும், திரை பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய்யின் பீஸ்ட் பட போஸ்டர் நேற்று சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது.

வாழ்த்து
விஜய்யின் பிறந்த நாளை திருவிழா போல் அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல் ஹாசன் இன்று காலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். தென்னந்திய திரையுலக பிரபலங்கள் துல்கர் சல்மான், மகேஷ் பாபு, மோகன்லால் போன்றவர்களும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கொண்டாட்டம்
இந்த நிலையில்தான், நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்காக நடிகரும் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீ ட்டில், வசீகரமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் பேரன்பை பெற்றவர்; என்றும் அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும் இளமையுமாய் திகழும் அண்ணன் தளபதி விஜய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

வைரல்
விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொல்லி இருக்கும் விதம்தான் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக திமுகவில் முதல்வர் ஸ்டாலினைத்தான் தளபதி என்று அழைத்து வந்தனர். அதன்பின் ஸ்டாலின் கட்சி தலைவரான பின் அவரை தளபதி என்பதற்கு பதிலாக பலர் தலைவர் என்று அழைக்க தொடங்கினார்கள். சிலர் தளபதி என்றே ஸ்டாலினை அழைத்து வந்தனர்.

ஏன் இப்படி
இன்னொரு பக்கம் சினிமாவில் இளைய தளபதியாக இருந்த விஜய் தன்னை தளபதி என்று மாற்றிக்கொண்டார். பொதுவாக திமுக தலைவர்கள் யாரும் பொது தளங்களில் விஜய்யை தளபதி என்று அழைத்தது கிடையாது. ஸ்டாலினை தளபதி என்று அழைத்து வந்ததால், விஜய்யை அப்படி அழைக்காமல் தவிர்த்தனர். தேவையில்லாத குழப்பம், சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் திமுகவினர் பொதுவாக விஜய்யை நடிகர் விஜய் என்று மட்டுமே குறிப்பிட்டு வந்தனர்,

ஆனால்
ஆனால் உதயநிதி ஸ்டாலின் இப்போது திடீரென வெளிப்படையாக "அண்ணன் தளபதி" என்று விஜய்யை குறிப்பிட்டுள்ளார். இத்தனை நாள் நிலவி வந்த தயக்கத்தை, வழக்கத்தை உடைக்கும் வகையில் உதயநிதி இப்படி ட்வீ ட் செய்துள்ளார். விஜய்யை தளபதி என்று அழைக்கலாம்.. தப்பு இல்லை என்று திமுகவினருக்கு கிரீன் சிக்னல் கொடுப்பது போல உதயநிதி ட்வீ ட் செய்துள்ளார்.

ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகிவிட்டதால் விஜய்யை தளபதி என்று திமுகவினர் அழைப்பதில் இனி சிக்கல் இருக்காது. இன்னொரு பக்கம் திமுக - விஜய் இடையே சில மாதங்களாக நெருக்கம் ஏற்படுவதாக வெளியான தகவல்களை இந்த வாழ்த்து கொஞ்சம் உறுதிப்படுத்தி உள்ளது. திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் விஜய் இருக்கிறார், திமுக மீது அவருக்கு சாப்ட் கார்னர் இருக்கிறது என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது.

சைக்கிள்
தேர்தல் நேரத்தில் கூட சைக்கிளில் வந்தது, கருப்பு சிவப்பு சைக்கிள் பயன்படுத்தியது என்று விஜய் ரகசிய அரசியல் பேசியதாக கிசுகிசுக்கப்பட்டது. அதோடு திமுகவில் விஜய் ஐக்கியம் ஆகிறாரோ என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது விஜய்யை அண்ணன் தளபதி என்று உதயநிதி மனதார வாழ்த்தி இருப்பது சந்தேங்களை அதிகப்படுத்தி உள்ளது.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம்











Click it and Unblock the Notifications