அது என்ன "தாலி fetish.." நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போட்டோ பார்த்தீங்களா.. குரூர எண்ணம் வளர்கிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் தங்கள் தாலியை வெளிப்படையாக அணிந்து புகைப்படங்களை வெளியிட்டதை பார்த்திருப்பீர்கள். இதனிடையேதான், தாலி என்பது ஒரு புதிய விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இளைஞர்களிடையே 'தாலி மோகம்' (Thali Fetish) எனும் புதிய போக்கு உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் தாலி அணிந்த பெண்களின் அழகு பற்றி பலர் பாராட்டுகிறார்கள்.

பாரம்பரியமாக திருமணத்தின் புனிதமான அடையாளமாக கருதப்பட்ட தாலி, இன்று ஒரு அழகு ஆபரணமாக மாறி வருகிறது. பல தமிழ் படங்கள் தாலியை மையமாகக் கொண்டு வெற்றி பெற்றதன் மூலம், தாலிக்கு சென்டிமென்ட் உயர்த்தப்பட்டது. தாலியை காக்க போராடும் பெண்களை மையமாக கொண்ட படங்கள் நூறு நாட்களை கடந்து ஓடின. ஆனால், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கால கட்டத்தில், தாலி அணிந்த பெண்களின் புகைப்படங்கள் வேறு கோணத்தில் பார்க்கப்படுகின்றன. இளைஞர்கள் இதை ஒரு ஃபேஷனாகவும், மோக பொருளாகவும் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

thali keerthy suresh

இந்த புதிய போக்கை 'தாலி ஃபெட்டிஷ்' என்று அழைக்கின்றனர் இளைஞர்கள். தாலி அணிந்த பெண்கள் இன்னும் அழகாகத் தெரிவதாக வெளிப்படையாகவே கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தாலி என்பது ஒரு திருமணத்தின் அடையாளம் மட்டுமல்லாமல், கணவன் மனைவி உறவின் பரிசுத்தத்திற்கும் ஒரு அடையாளமாகவே இதுவரை தமிழ்ச் சூழலில், பார்க்கப்பட்டு வந்துள்ளது.

தாலி அல்லது மெட்டியை பார்த்தால், அது திருமணமான பெண் என்று விலகி செல்லும் ஆண்களை கொண்டதாக இருந்த சமூகம், இப்போது அதையே மோகத்தோடு பார்க்கும் மனநிலைக்கு சென்றிருக்கிறது என்பதை சமீபத்திய சமூக வலைத்தள பதிவுகள் அம்பலப்படுத்துகின்றன.

உளவியல் நிபுணர்கள், இது ஒரு ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும், பிற ஆணின் மனைவியை ஆசைப்படும் ஒரு குரூர மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கலாம் என்றும் எச்சரிக்கின்றனர். ஆம்.. அடுத்தவர் மனைவி என தெரிந்தே அவருடன் சாட் செய்வது இந்த குரூர மனப்பான்மைக்கு தீனி போடுகிறது. அடுத்தவர் மனைவி என்பதற்கான அடையாளமாக தாலி பார்க்கப்படுகிறது. அந்த புகைப்படத்தை பார்த்தபடி அந்த பெண்களோடு சாட் செய்வது இளைஞர்களுக்கு ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் சில உளவியல் நிபுணர்கள். அடுத்த ஆணின் ஜோடியை அடைந்து தனது எல்லையை விரிவுபடுத்தும் மிருகங்களின் வாழ்வியல், இதுபோன்ற மனநிலையில் உள்ள ஆண்களிடமும் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தாலி மோகம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. ஆனால் இது தெரியாமல் நடிகைகள் தாலியை காட்டுவதை ஒரு ஃபேஷனாக்கியிருக்கிறார்கள். அழகாக இருக்கிறது, உங்கள் கழுத்து அழகையே தாலி மாற்றிவிட்டது என்றெல்லாம் வரும் கமெண்ட்களை பார்க்கும் நடிகைகள் இது யதேர்ச்சையானது என நினைக்கிறார்கள். ஆனால் இதில் மோக அழுக்கு மூழ்கி இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+