அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம்..விவாகரத்து ஆன பின் சிலர் வாங்க வந்தனர்..உதயநிதி
அதிமுக ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாகவும் விவாகரத்து ஆன சிலர் கூட திமுக ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் வாங்க வந்ததாகவும் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் 3 ஆண்டு காலமாக தாலிக்கு தங்கம் வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தனர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்ட போது விவாகரத்து ஆனவர்கள் கூட வந்து வாங்க ஆரம்பித்தனர் என்று கூறினார்.
பத்தாம் வகுப்புக்கு மேல் படித்த பெண்களுக்கு திருமணத்தின் போது உதவித் தொகை வழங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது.

தமிழக சட்டசபையில் கடந்த 2022- 2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார்.
அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்
இந்தநிலையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திய திமுக அரசுக்கு எதிராக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டன குரல்களை எழுப்பினர். அதற்கு திமுக அரசு விளக்கம் அளித்தது. அமைச்சர்களும் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டது பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் 3 ஆண்டு காலமாக தாலிக்கு தங்கம் வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தனர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்ட போது விவாகரத்து ஆனவர்கள் கூட வந்து வாங்க ஆரம்பித்தனர் என்ற கூறினார்.
அதன் பிறகுதான் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றி பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக
புதுமைப்பெண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 மாதம் செலுத்தப்படுகிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications