ஃபர்ஹானா திரைப்படம்! ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இல்லை! தமிமுன் அன்சாரி சர்டிஃபிகேட்!
சென்னை: ஃபர்ஹானா திரைப்படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதுமில்லை என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார்.
ஃபர்ஹானா திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
''இன்று ஃபர்ஹானா திரைப்படத்தின் பிரத்யேக காட்சி அப்படக்குழு சார்பில் திரையிடப்பட்டது. முன்னதாக இதன் இயக்குனர் நெல்சன் என்னை தொடர்புக் கொண்டு இத்திரைப்படம் குறித்து எடுத்துரைத்தார்.
சிறப்பு காட்சிக்கு வருமாறும், பலருக்கும் அழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டார். நான் தொடர் நிகழ்ச்சிகளில் இருப்பதால், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணை செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோர் பங்கேற்றனர்.
மவ்லவி மன்சூர் காஸிஃபி, மவ்லவி தர்வேஸ் ரஷாதி, SDPI மாநில செயலாளர் உமர் பாரூக், சமரசம் ஆசிரியர் அமீன், IFT நிர்வாகி சிக்கந்தர், இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஷேக், சமூக செயல்பாட்டாளர் கௌஸ், மற்றும் INL, IMMK நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகளும் பங்கேற்றனர். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதுமில்லை என பலரும் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.''
ஃபர்ஹானா திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications