ஆஹா.. சூப்பர்! இதைத்தானே எதிர்பார்த்தோம்! 500 மதுக்கடைகள் மூடல்! கொண்டாடும் தமிமுன் அன்சாரி!
சென்னை: நாளை முதல் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அரசின் அறிவிப்பை கொண்டாடி வரவேற்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
கடந்த வாரம் திமுக அரசுக்கு எதிராக மிக சூடாக பேசிய தமிமுன் அன்சாரி, இன்று முதல்வரை பாராட்டி வாழ்த்தி அவர் முன்னெடுத்த நடவடிக்கையை கொண்டாடுகிறார்.

இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு பூரண மதுவிலக்கையும் அமல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிமுன் அன்சாரி விடுத்துள்ள பதிவு வருமாறு;
''நாளை முதல் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆரோக்யமான சமூகத்தை கட்டமைக்க பூரண மதுவிலக்கு அவசியம் என்பது எமது கொள்கையாகும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இன்றைய முதல்வரிடம் நாங்கள் கொடுத்த ஐந்தம்ச கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
கடைசியாக நடைபெற்ற சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது கூறியவாறு, அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பூரண மதுவிலக்கை நோக்கிய ஆரம்ப முயற்சி என்ற அளவில் இதனை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வரவேற்கிறோம். தமிழக முதல்வருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உடல் நல சீர்கேடு, சாலை விபத்துகள், குடும்ப சீரழிவுகள், தனிநபர் பொருளாதார வீழ்ச்சி என பலவற்றுக்கும் மூலக்காரணமாக மதுபான கடைகளே விளங்குகின்றன. எனவே அடுத்தடுத்து இது போன்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications