அமைச்சர் தம்பியிடம் மனு கொடுத்த எம்.பி. அக்கா! பரிசீலிப்பதாக பதில்! அப்படியென்ன கோரிக்கை?

சொந்த தம்பி அமைச்சர் என்றாலும் கூட முறைப்படி மனு கொடுத்த அக்கா எம்.பி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரும், தனது உடன் பிறந்த தம்பியுமான தங்கம் தென்னரசுவிடம் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

என்னதான் அமைச்சர் தனது தம்பி என்றாலும் முறைப்படி கோரிக்கை மனு கொடுத்து நாடக கலைஞர்களுக்காக முறையிட்டிருக்கிறார்.

அக்கா, தம்பியாக இருந்தால் கூட எல்லாம் வரைமுறைகளின் படியே நடக்கிறது என்பதை இந்தக் கோரிக்கை மனு மூலம் உணர்த்தியுள்ளார் தமிழச்சி தங்க பாண்டியன்.

தென் சென்னை தொகுதி

தென் சென்னை தொகுதி

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும், அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உடன் பிறந்த அக்கா, தம்பி ஆவர். இருவரது குடும்பமும் மிக ஒற்றுமையாக உறவுகளை பேணி வரும் நிலையில், தனிப்பட்ட முறையில் தனது தம்பியும், அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் எந்தவொரு கோரிக்கையையும் இதுவரை எடுத்துச் செல்லாதவர் தமிழச்சி தங்கபாண்டியன். இப்போது முதல்முறையாக ஒரு பொதுக் கோரிக்கை மனுவுடன் தம்பியை சந்தித்துள்ளார்.

என்ன கோரிக்கை?

என்ன கோரிக்கை?

தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ் நிகழ்த்து கலையான நாடகங்களை அரங்கேற்ற, ஒத்திகைகளை மேற்கொள்ள, நவீன வசதிகளுடன் கூடிய அரங்கம் ஒன்றிற்கு இடமளித்து வடிவமைத்தும் தருமாறு தமிழ் நாடகக் கலைஞர்கள் சார்பாக தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை மனு அளித்த தமிழச்சி தங்கபாண்டியன் அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அக்கா கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஸ்பெஷல் சலுகை

ஸ்பெஷல் சலுகை

அக்கா, தம்பியாக இருந்தால் கூட எல்லாம் அரசின் வரைமுறைகளின் படியே நடக்கிறது என்பதை இந்தக் கோரிக்கை மனு மூலம் உணர்த்தியுள்ளார் தமிழச்சி தங்க பாண்டியன். அமைச்சரின் அக்கா என்பதற்காகவும், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்காகவும் தனக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை ஏதும் இல்லை என்பதையும் இந்த புகைப்படம் வாயிலாக தமிழச்சி உணர்த்தியுள்ளார்.

நாடகக் கலைஞர்கள் சங்கம்

நாடகக் கலைஞர்கள் சங்கம்

நாடகங்களை அரங்கேற்ற, ஒத்திகைகளை மேற்கொள்ள, நவீன வசதிகளுடன் கூடிய அரங்கம் ஒன்று அமைத்துக் கொடுக்கக் கோரி தமிழச்சி முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு தமிழ் நாடகக் கலைஞர்கள் சங்கத்தினர் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+