Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழச்சி தங்கபாண்டியன் - தென் சென்னை திமுக வேட்பாளர்: அப்பா, தம்பி வரிசையில் அரசியலில் ஜெயிப்பாரா?

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளராக களமிறங்குகிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Thamizhachi thangapandian details:தமிழச்சி தங்கபாண்டியன் அப்பா,தம்பி வரிசையில் அரசியலில் ஜெயிப்பாரா?

    சென்னை: தென் சென்னையில் திமுக சார்பில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர் தமிழச்சி தங்க பாண்டியன்.

    முன்னாள் அமைச்சர் வி.தங்கபாண்டியனின் மகளான த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். அடிப்படையில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், பின்னர் சென்னை குயின்மேரீஸ் கல்லூரி பேராசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.

    thamizhachi thangapandian south chennai dmk candidate biodata

    இவர் தமிழக அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் சகோதரி ஆவார். இவரது கணவர் ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகர். இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    எழுத்தாளரான தமிழச்சி தங்கபாண்டியன், எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, பேச்சரவம் கேட்டிலையோ, மஞ்சணத்தி ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதி இருக்கிறார். மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில்'நதி போகும் கூழாங்கல் பயணம்’ என்கிற பாடலை எழுதியவர். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக பாராட்டுகளைப் பெற்றவர்.

    இவர் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வின் சார்பில் தென் சென்னையில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.

    பேரறிஞர் அண்ணா, டி.டி கிருஷ்ணமாச்சாரி, முரசொலி மாறன், இரா. வெங்கட்ராமன், வைஜயந்தி மாலா பாலி, த.இரா. பாலு என பிரபல அரசியல் தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி இது.

    கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயவர்தன், திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனை தோற்கடித்தார் என்பது நினைவுகூரத் தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+