Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக, அதிமுக ஒழிய வேண்டும்.. அதுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.. தமிழருவி மணியன் ஆவேசம்

ரஜினி நிச்சயம் கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எனக்கு ஒரு கனவு உள்ளது. அது, தமிழகத்திலிருந்து திமுக, அதிமுக ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆவேசமாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் 100 சதவீதம் அரசியலுக்கு வருவார். திமுக, அதிமுகவுடன் ஒரு காலத்திலும் அவர் சேர மாட்டார். மேலும் தனக்கென எந்த வண்ணத்தையும் அவர் பூசிக் கொள்ளவும் மாட்டார். தமிழகத்தில் அவர் இடம் பெறும் கூட்டணியானது, அவரது தலைமையில்தான் அமையும் என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இந்து ஆங்கில நாளிதழுக்கு தமிழருவி மணியன் ஒரு சிறப்புப் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் மேலும் பல தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நான் காவிச் சாயத்திற்கு விழ மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதைத்தான் நானும் கடந்த இரண்டரை வருடமாக சொல்லி வருகிறேன். அவர் யாருக்கும் விழ மாட்டார். அவர் தனியாகவே வருவார். தமிழகத்தில் அவர் இடம் பெறும் கூட்டணிக்கு அவர்தான் தலைவர். தயாரானதும் அவர் களம் புகுவார்.

சூழல்

சூழல்

ரஜினியின் கூட்டணியில் யாரெல்லாம் இடம்பெறுவார் என்பதை என்னால் சொல்ல முடியாது. அது அரசியல் சூழலைப் பொறுத்ததை. ஆனால் அடுத்த ஆண்டு நிச்சயம் அவர் கட்சி தொடங்குவார், சட்டசபைத் தேர்தலை சந்திப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

காவி சாயம்

காவி சாயம்

காவி சாயம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்களுக்கு சிறப்புக் காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. திருவள்ளுவரை அவமானப்படுத்தியது தொடர்பான கேள்வியை அவரிடம் கேட்டபோது அதை பயன்படுத்தி பொறுத்தமான கருத்தை, சரியான நேரத்தில் அவர் தெரிவித்துள்ளார். முன்பு அவர் பாஜகவின் சில நல்லமுடிவுகளை ஆதரித்துள்ளார். வாஸ்தவம்தான்.

அரசியல் வாழ்க்கை

அரசியல் வாழ்க்கை

ஆனால் தனக்குப் பிடிக்காத விஷயங்களிலிருந்து அவர் விலகியே இருந்துள்ளார். அதையும் மறக்கக் கூடாது. எனக்கு ஒரே ஒரு கனவுதான், இலக்குதான். அது, தமிழகத்தை விட்டு திமுக, அதிமுக இரண்டுமே அழிக்கப்பட வேண்டும்.இந்த இரு கட்சிகளும் தமிழ்நாட்டையே குட்டிச் சுவராக்கி அழித்து விட்டன. பெருந்தலைவர் காமராஜர் 1967ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட நாளிலிருந்துதான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

அதிமுக, திமுக

அதிமுக, திமுக

இந்த இரு திராவிடக் கட்சிகளையும் கடந்த 50 வருடமாக பார்த்து வருகிறேன். இவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார். எனது கனவை ரஜினி நிறைவேற்றுவார். இதை நான் 100 சதவீதம் நம்புகிறேன். அவர ஒரு போதும் திமுக, அதிமுகவுடன் அணி சேர மாட்டார். கடந்த 30 மாதமாக அவரை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அவரை எனக்கு நன்றாக தெரியும். அதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை என்றார் தமிழருவி மணியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+