தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு மெகா சிக்கல்.. எச்சரிக்கும் எழிலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிவிட்டது. ஏராளமான சர்ச்சைகள், புகார்கள் எழுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய் மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்திட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் சேவை தரம் குறைந்து, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திமுக எழிலன் நாகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக மருத்துவரணி செயலாளர், முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "குழந்தைகள் நிறை மாதம் இல்லாமல் முன்கூட்டியே பிறக்கும்போது, நுரையீரல் சரியாக வளர்ந்திருக்காது. அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக்குழாயில் 'சர்பேக்டன்ட்' என்னும் மருந்தை கொடுப்போம். இதன் மூலம் குழந்தையின் உயிரை காக்க முடியும்.

Thanga Maaman Gold Ring Scheme

தாய்மாமன் சீர்திட்டத்தால் பிரச்சனை

சர்பேக்டன்ட் மருந்து தேவைப்படுமளவு குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை சார்பில் ஸ்டாக் பாதுகாக்கப்படும். அதன் விபரத்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் குழு நிறுவனத்திடம் கொடுக்கப்படும். ஸ்டாக் குறையும்போது புதிய ஸ்டாக்குகள் வாங்கப்படும். இது குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். தாய் இறப்பு, குழந்தை இறப்பு சதவீதத்தை நாம் கட்டுப்படுத்தியுள்ளது.

2021 - 2026 வரை 1,000 குழந்தைகளில் 8 குழந்தைகள் இறந்ததாக தரவுகள் சொல்கிறது. 1 லட்சம் தாய்களில் 24 தாய்மார்கள் இறப்பதாக தரவுகள் சொல்கிறது.
இது ஐரோப்பியா தரத்துக்கு இணையானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக இருக்கும். தாய்மாமன் தங்க சீர் திட்டத்தில், மருத்துவ உபகரணங்களில் பிரச்சனை எழுந்துள்ளது.

தங்கம் கொள்முதல் செய்யும் பணி

மருந்துகள், மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வது தான் தமிழ்நாடு மருத்துவ பணிகள் குழுவின் பணி. இப்போது அவர்கள் தங்கம் கொள்முதல் செய்யும் பணியை செய்கிறார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தான் அதிக மீட்டிங் நடத்தப்படுகிறது. அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல், ஆள் பற்றாக்குறை பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. பிரசவ தீவிர சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவமனைகளில் தங்கத்தை எப்படி பாதுகாக்க முடியும். இதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதா. இதற்கு தனி கூண்டு, காவலர் அமைத்து பாதுகாக்க முடியுமா.

குழந்தை, தாய் இறப்பு விகிதத்தை குறைக்கும் பணியை பார்ப்போமா. இல்லையென்றால் தங்கத்தை பாதுகாப்பது பற்றி யோசிக்க முடியுமா. எல்லாரையும் அரசு மருத்துவமனையில் டெலிவரி செய்ய முயற்சிப்போம் என்கிறார்கள். ஏற்கனவே அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. சின்ன மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்தவர்கள், இப்போது தங்க மோதிர திட்டத்திற்காக அரசு மருத்துவமனை நோக்கி வருவார்கள்.

வீராப்புக்காக வசனம் பேசக்கூடாது

அப்போது சர்பேக்டன்ட் போன்ற அத்தியாவசிய மருந்து இல்லாத நிலை அல்லது அறுவை சிகிச்சை குழு இல்லாவிடின் சிக்கல் ஏற்படும். தாய், குழந்தை இறப்பு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் இதை குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு மட்டுமே மோதிரம் என சொல்லியது அந்த நிலையை மாற்றும் அபாயம் உள்ளது. சுகாதாரத்துறையில் வீராப்புக்காக வசனம் பேச கூடாது.

தவெகவினருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவனையில் தான் சிகிச்சை பெறுவோம் என சட்டமன்றத்தில் அமைச்சர் பேசினார். இப்போது வி.எஸ் பாபு சார் எங்கே உள்ளார். சிறிய நர்ஸிங் ஹோம்களில் பிரசவம் பார்ப்பது அவர்களின் உரிமை. மக்களின் உரிமையை நீக்கி, மருத்து சேவையில் பாதிப்பு ஏற்படுத்தும். இதை சரி செய்வதற்கான பணியாட்கள், உபகரணங்கள் போன்ற கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதா. தொலைநோக்கு பார்வையில் யோசிக்காமல், கண்மூடித்தனமாக அறிவித்துள்ளனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+