நானா பாம்பு?.. தினகரனா எனக்கு சோறு போட்டார்?.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்
Recommended Video

சென்னை: நான் பெட்டிப் பாம்பாக அடங்க மாட்டேன் என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தங்கதமிழ்ச் செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையில் நாடாளுமன்றத் தேர்தல் முதல் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார்.
அதில் கட்சி நிர்வாகம் சரியில்லை என்றும் நெல்லை, கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் கட்சியை அழித்து வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் இதுகுறித்து கடந்த 20-ஆம் தேதி தங்கதமிழ்ச் செல்வனை அழைத்து தினகரன் எச்சரித்துள்ளார்.

பொங்கி எழுந்த
இதற்கு மேலும் பேசிக் கொண்டிருந்தால் மாவட்ட செயலாளர் பதவி, கொள்கை பரப்பு செயலாளர் பதவி ஆகியன பறிக்கப்படும் என தங்கதமிழ்ச் செல்வனை எச்சரித்துள்ளார். இந்த கோபத்தை எல்லாம் சேர்த்து வைத்திருந்த தங்கதமிழ்ச் செல்வன் நேற்று முன் தினம் அமமுக பிரமுகர் ஒருவரிடம் பொங்கி எழுந்துள்ளார்.

சந்திப்பு
அப்போது தினகரன் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த நிலையில் ஆடியோ விவகாரம் குறித்து டிடிவி தினகரனும் நேற்றைய தினம் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நீக்கம்
அப்போது தினகரன் கூறுகையில் தங்கதமிழ்ச் செல்வன் என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார் என்றும் அவர் விரைவில் கட்சியிலிருந்தும் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவார் என்றும் தினகரன் தெரிவித்தார்.

சம்பந்தமில்லை
இதற்கு தங்கதமிழ்ச் செல்வன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் என்னை யாரும் இயக்கவில்லை. தினகரன் சொல்வது போல் எஸ் பி வேலுமணியோ தங்கமணியோ என்னை இயக்கவில்லை.

சோறா போடுகிறார்
விமர்சனங்கள் வைக்கத்தான் செய்வேன். விமர்சனங்களை தாங்கிக் கொண்டு தலைமை அழைத்து பேசியிருக்க வேண்டும். பெட்டிப் பாம்பாக அடங்க மாட்டேன். தினகரனிடம் பெட்டிப் பாம்பாக அடங்க அவர் என்ன எனக்கு சோறா போடுகிறார்.

விமர்சகர்
எனது அடுத்த கட்ட நடவடிக்கை அமைதியாக இருப்பதுதான். ஊடகங்களில் விமர்சகராக வருவேன் என தங்கதமிழ்ச் செல்வன் விளக்கமளித்துள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications