தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொ.ப.செ பதவி கொடுத்தது இதற்குத்தானா.. அதிரிபுதிரி நெட்டிசன்கள்
சென்னை: அதிமுகவிலிருந்து டிடிவி தினகரனுடன், இணைந்து தனது எம்எல்ஏ பதவியை இழந்தவர் தங்க தமிழ்செல்வன். ஆனால், என்ன ஆச்சோ தெரியவில்லை, திடீரென தினகரனை விமர்சனம் செய்துவிட்டு, திமுக பக்கம் வந்துவிட்டார்.
அதிமுகவின் தேனி மாவட்ட பிரச்சார பீரங்கியாக இருந்தவர், நேர் எதிர் துருவமான திமுகவில் எப்படி தாக்குப் பிடிப்பார் என்ற பேச்சு பரவலாக எழுந்தது.
கட்சியில் சேர்ந்த பிறகு பதவி எதுவும் தரப்படாமல் இருந்த நிலையில், இப்போது, திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார், தங்க தமிழ்செல்வன். ஆ.ராசா, திருச்சி சிவா போன்றோர், வகிக்கும் அதேபோன்ற பதவி, தங்க தமிழ்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளதை நீண்ட கால திமுக உடன்பிறப்புகள் பலரும் ரசிக்கவில்லை. இதோ இணையத்தில் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்.
|
இதுதான் விளக்கமா
அடிக்கடி தன்னோட கொள்கையை மாற்றி கட்சி தாவுவதால் அண்ணன் தான் எங்கள் கட்சியின் கொ.ப.செ. இப்படி சொல்கிறார் இந்த நெட்டிசன். கொ.ப.செவுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்குதா. அடேங்கப்பா.
|
கிளம்பலாமே
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்செல்வன் நியமனம் #செய்தி. அப்புறமென்ன இனி பேசுறது பூராவும் பொய்யாதான் இருக்கும் கிளம்புங்க கிளம்புங்க
|
திருச்சி சிவா
திமுக கொள்கை பரப்பு செயலாளராக தங்கதமிழ்செல்வன் நியமனம்! ஆ.ராசா, திருச்சி சிவாலாம் எங்க தங்க.தமிழ்செல்வன் எங்க? ஏணி வச்சா கூட எட்டாதே :-
|
தொண்டர்கள் கதி
உபிஸ்சுக்கு கடைசிவர கோபாலபுர கேட் தான்!! இப்படி சொல்கிறார் இந்த நெட்டிசன். அடி மட்ட தொண்டர்களுக்கு திமுகவில் உயர் பதவி கிடைக்கவில்லை என்ற குமுறலின் வெளிப்பாடாக இதை பார்க்க வேண்டியுள்ளது.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை!












Click it and Unblock the Notifications