அடடே! சிலையாக வடிக்கப்பட்ட ஸ்டாலின், உதயநிதி - தங்க தமிழ்ச்செல்வன் ட்வீட்
சென்னை: திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச் செல்வன், தனது ட்விட்டரில் சிலையாக வடிக்கப்பட்ட ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற, மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.
இதில் சில கட்சிகள், தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைக்காததாலோ, வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை பெற முடியாததாலோ அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இதனால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

குறிப்பாக, திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. மற்றொரு பக்கம் விசிக ஒரு லிஸ்டை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.
எனினும், இதைப்பற்றியெல்லாம் பெரிகாக அலட்டிக் கொள்ளாத திமுக, விருப்பமனு தாக்கல் செய்த வேட்பாளர்களிடம் தீவிரமாக நேர்காணல் நடத்தி வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 'பலமான' வேட்பாளர்களை டிக் செய்யும் பணியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வளவு தகதக சூழலில், அமமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியமான தங்க தமிழ்ச்செல்வன், உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதிக்கு முத்தம் கொடுப்பது போன்று வடிக்கப்பட்ட சிலையின் புகைப்படத்தினை அவர் பகிர்ந்துள்ளார். திமுகவினர் பலரும், இந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications