Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன திமுகவில் சேர்ந்துவிட்டேனா? பகீர் செய்திகளுக்கு தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்!

திமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் சேர மாட்டேன், என்றும் டிடிவி தினகரனின் வழியிலேயே பயணிப்பேன் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த வாரம் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவர் திமுகவில் இணைந்தார். இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Thanga Tamilselvan denies and says that he isnt gonna join in DMK

இந்த நிலையில் அமமுகவில் இருந்து இன்னும் சிலர் திமுகவிற்கு செல்ல இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தது. அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் விலகி செல்ல போவதாகவும் காலையில் தகவல்கள் வந்தது.

அடுத்த வாரம் அவர் திமுகவில் இணைய போகிறார். இதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று செய்திகள் பரவியது. இந்த செய்திகளுக்கு தற்போது தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர், நான் திமுகவில் சேர விருப்பமாக திமுகவின் ஐடி விங் வதந்தியை பரப்பி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம். திமுகவில் சேர மாட்டோம். எனது பயணம் டிடிவி தினகரனுடன் தொடரும்.

வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். நான் என்றும் தியாக தலைவி சசிகலாவின் ஆணைக்கிணங்க டிடிவி தினகரனின் வழியில் என் பயணம் தொடரும். துரோகத்தை வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி, என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் அவர் காலையில் இருந்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+