பிடிக்காட்டி கட்சியை விட்டு நீக்குங்க.. இப்படி சின்னத்தனமா செஞ்சா எப்படி..தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்
Recommended Video

சென்னை: அமமுக குறித்து நான் பேசியது உண்மைதான். என்னை பிடிக்காவிட்டால் கட்சியிலிருந்து என்னை நீக்குங்கள் என தங்கதமிழ்ச் செல்வன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் செந்தில் பாலாஜி, இன்னொருவர் தங்கதமிழ் செல்வன். இவர்களில் செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து தற்போது அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார்.
இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கதமிழ்ச் செல்வனும் திமுகவுக்கு தாவுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் தேனி எம்பி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அமமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து டிடிவி தினகரன் மீதும் கட்சி மீதும் தங்கதமிழ்ச் செல்வனுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் அதிமுகவுக்கே மீண்டும் திரும்புவதாகவும் கூறப்பட்டு வந்தது.
பரபரப்பு
இந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு ஆடியோ வைரலாகியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் தங்கதமிழ்ச் செல்வன் ஆபாசமாக பேசுவது போன்ற ஒரு ஆடியோ இருந்தது. தான் விஸ்வரூபம் எடுத்தா அழிந்து போய்விடுவார் டிடிவி என தங்கதமிழ்ச் செல்வன் பேசியிருந்ததாக ஆடியோ உலா வந்தது.

சரி செய்யுங்கள்
இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த கட்சியில் நிர்வாகம் சரியில்லை. அதை மாற்ற வேண்டும். நெல்லை மற்றும் கோவையில் மண்டல பொறுப்பாளர்களால் கட்சி அழிந்து விட்டது. இதையெல்லாம் சரி செய்யுங்கள் என நான் ஊடகங்களில் பேசியது உண்மைதான்.

நீக்குங்கள்
அதற்கு என்னை அழைத்து கண்டிக்காமல் சமூகவலைதளங்களில் என்னை விமர்சனம் செய்து கருத்துகள் வெளியாகி வருவது என் மனதுக்கு வேதனையை தருகிறது. உண்மையில் நான் தவறு செய்திருந்தால் கட்சியை விட்டு நீக்க வேண்டியதுதானே.

விரும்பவில்லை
ஏன் இப்படி சிறுப்பிள்ளைத்தனமான செயல்பாட்டை செய்ய வேண்டும். உண்மையில் என்னை பிடிக்காவிட்டால் கட்சியை விட்டு நீக்குங்கள். நான் நேர்மையானவன். சில தகவல்களை சொல்கிறேன், அது பிடிக்காவிட்டால் என்னை கட்சியிலிருந்து நீக்கிவிடுங்கள். இதற்கு மேல் இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications